Home » Archives for August 2022 » Page 7

இதழ் தொகுப்பு August 2022

வென்ற கதை

கனவில் கலெக்டர்; நிஜத்தில் கவிஞர் – இளங்கோ கிருஷ்ணன்

பொன்னி நதி பாக்கணுமே… இன்று ஊர் முழுக்கப் பாடிக்கொண்டிருப்பது இதைத்தான். மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை; எழுதாத செய்தி இல்லை. சில நூறு பேர்கள் மட்டும் புழங்கும் இலக்கிய வட்டத்துக்குள் தெரிந்த பெயராக இருந்த இளங்கோ...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

சித்தாந்த வியாபாரிகள்

2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதில் இருந்து ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன)க்கு ஒரு அசகாய நம்பிக்கை வந்தது போல இருந்தது. அவர்களது தொண்டர்கள் எல்லாம் தினமும் இந்த வெற்றியைப் பற்றியே பிரஸ்தாபித்தார்கள். பாகிஸ்தானில் இருபெரும் கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 11

11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல் சூழ்நிலையில் தனது மிதவாதப் போக்குக்கு ஏற்ற வகையில் அமையுமா? எங்காவது நேரெதிர் நிலைபாடு எடுத்து விட்டான் என்றால் என்ன செய்வது? இது ஒரு பெருங்கவலை என்றால்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 11

11. சத்-சித்-ஆனந்தம் “கடவுள் இல்லை என்றால் நன்றாயிருக்கும். கடவுள் இருப்பதாகக் கருதினால் அந்தப் பாவி மீது நிறையச் சுமைகளைச் சுமத்த வேண்டியிருக்கும். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. என் சொந்தக் கருணையாலும் அன்பாலும்தான் கடவுள் இல்லாமல் இருக்கட்டும் என்று கூறுகிறேன். கடவுளை மறுப்பது எனது சொந்தத்...

Read More
நுட்பம் மின்நூல்

திருட்டுலகம்

பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும். திருட்டுச் சந்தை என்பது பதினேழாம் நூற்றாண்டில் இருந்து இருந்து வருவது. அதிகாரபூர்வப் பதிப்பின் விலையில் பாதி இருக்கும். அல்லது அதற்கும் கீழே. அச்சு மோசமாக...

Read More
பயணம்

பெண்களுக்காக ஒரு சுரங்கப் பாதை

சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 10

10. தேன் வைத்தியம் உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்,  ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும். “நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான்...

Read More
புத்தகம்

மறக்கக் கூடாத சரித்திரம்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. எனவேதான் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கடந்த காலப் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு அரியதொரு வரலாற்று பொக்கிஷமாய் அமையும் என்பதில்...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 11

11. யுத்தத்தின் தோற்றுவாய் பூமி எவ்வளவு பெரியது; தேசங்கள் எங்கெல்லாம் விரிந்து பரந்திருக்கின்றன என்று சரியாகத் தெரியாத காலத்திலேயே சில மன்னர்கள் புவி மொத்தத்தையும் ஆள நினைத்தார்கள். அதற்காகப் படையெடுத்துப் பாதி வழியில் ஊர் திரும்பினார்கள் அல்லது செத்துப் போனார்கள். பின்னர் பிரிட்டன் உலகெங்கும்...

Read More
நுட்பம் மின்நூல்

கிண்டிலில் புத்தகம் போட்டுக் கோட்டை கட்ட முடியுமா?

இந்தக் கட்டுரையில் வரும் ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு காற்புள்ளியும் நான் பெற்ற அனுபவங்களிலிருந்து எழுதப்படுவது. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கான அனுபவமும் 101% வரை மாறுபடலாம். – முகில் இந்தத் தமிழ் மண்ணிலே எழுத்தாளன் என்ற அடைமொழியைக் கொண்ட ஒவ்வொருவரும கடந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!