Home » தடையே இல்லா காட்டாறு
ஆளுமை

தடையே இல்லா காட்டாறு

வைத்தீஸ்வரன்

காட்சி ஒன்று:

“நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொலைவில் கேதார்நாத் ஆலயம் அழைத்துக் கொண்டிருந்தது. நீரின் வேகத்திற்கு மனிதர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா..? துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்க, நின்றிருந்த ரயிலில் ஏற முடிவு செய்தோம். ரயில் பெட்டிகள் ஏற்கனவே மனிதர்களால் நிறைந்திருந்தன. பெட்டிகளின் மேற்கூரையில் மட்டுமே இடம் இருந்தது. அதுவும் நிறைவதற்குத் தொடங்கியிருந்தது. உள்ளேயிருந்த மனிதர்கள் கதவைத் திறக்க அவ்வளவு யோசித்தார்கள். மேலிருந்து மனிதக்கைகள் நீண்டிருந்தன. கிடைத்த கையைப் பற்றி மேலே ஏறி அமர்ந்துவிட்டோம். வெள்ளம் ரயிலையே அசைத்துப் பார்க்க ஆரம்பித்தது. எவ்வளவு நேரம் உறுதியாக நிற்கும் என்ற அச்சம் அனைவருக்குமே இருந்தது. மண்சரிவுகள், பாறைகள் உருண்டன. மேலிருந்து பார்க்க ஆங்கிலத்தில் வரும் அழிவுத் திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாத காட்சி.

ஒரு மிகப்பெரிய பாறை கோயிலை நோக்கி உருண்டு வந்து கொண்டிருந்தது. அது மோதினால் கோயில் தகர்ந்து போவது உறுதி என்பது அது வரும் வேகத்திலேயே தெரிந்தது. கண்களை மூடிக்கொண்டோம். ‘ஓம் நமச்சிவாய’ என்று பிரார்த்திக்க ஆரம்பித்தோம். வாழ்க்கையின் இறுதி நாள் அது என்று நினைத்தோம். பிறகு நடந்தது தான் தெய்வச்செயல், அற்புதம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம். உருண்டு வந்த பாறை கோயிலுக்குப் பின்னே ஒரு அரண்போல நின்றுவிட்டது. அதைத் தள்ளி வந்த வெள்ளம் வேகம் மட்டுப்பட்டு இரண்டாகப் பிரிந்து செல்ல ஆரம்பித்தது. கோயிலைக் காக்க அந்த இயற்கையே உதவியதாகத் தான் தோன்றியது. இன்றுகூடப் ‘பீமஷீலா’ என்ற அந்தப் பாறைக்குப் பூஜை செய்து வருகிறார்கள். ரயில்மேல் அமர்ந்திருந்த எங்களுக்கு நேரம் நின்று போயிருந்தது. பிறகு ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து எங்களைக் கயிறுபோட்டுத் தூக்கிக் கரை சேர்த்தன. நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் ரயில் டிக்கெட் வாங்கி ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஆறாயிரத்திற்கும் மேலானவர்கள் பலியான வெள்ளம் அது. எனக்கு இரண்டாவது ஜென்மம் சார்.”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!