Home » பணம் படைக்கும் கலை – 5
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 5

5. ஓய்வுக்கால நிதி

சிறுவயதில் ‘எறும்பும் வெட்டுக்கிளியும்’ என்று ஒரு கதை படித்திருப்பீர்கள், அல்லது, கேட்டிருப்பீர்கள். அந்தக் கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

காட்டில் ஓர் எறும்பு சுறுசுறுப்பாக உழைத்துத் தானியங்களைச் சேர்த்துவைக்கும். வெட்டுக்கிளியோ, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று பாடித் திரிந்துகொண்டிருக்கும். பின்னர் பனிக்காலம் வந்ததும் எறும்பு தான் சேர்த்துவைத்த தானியங்களைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும். வெட்டுக்கிளியோ பசியில் வாடித் துவண்டுபோகும்.

சிறுவர்களுக்கு உழைப்பின் மேன்மையை உணர்த்துவதற்கெனச் சொல்லப்படும் இந்தக் கதையைப் பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால், அதன் நீதியைச் சற்று மாற்றவேண்டியிருக்கும்: உழைக்கும்போதே சேமிக்கவேண்டும். அப்போதுதான் பின்னாட்களில் உழைக்கமுடியாத சூழல் வரும்போது அந்தச் சேமிப்பு நமக்குக் கைகொடுக்கும்.

அதாவது, நாம் வேலைக்குச் சென்று அல்லது சொந்தத் தொழில் செய்து சம்பாதித்துக்கொண்டிருக்கும்போது, அதில் ஒரு பகுதியை நம்முடைய ஓய்வுக்காலத்துக்கென ஒதுக்கிவைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அந்த ஓய்வுக்காலம் வரும்வரை அந்தத் தொகையைத் தொடக்கூடாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!