Home » பெண்களுக்காக ஒரு சுரங்கப் பாதை
பயணம்

பெண்களுக்காக ஒரு சுரங்கப் பாதை

படப்பிடிப்புக் குழுவினருடன்

சுதந்திர இந்தியாவுக்கு எழுபத்தைந்து வயது என்றால் பொன்னியின் செல்வனுக்கு எழுபத்திரண்டு வயது. கவன ஈர்ப்பு, வெற்றி வாகை, நீடித்த-நிலைத்த புகழ் வகையறாக்களில்கூட ஒரே மாதிரிதான். இந்தியா தனது சுதந்திரப் பவழ விழாவைக் கொண்டாடும் தருணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது. படம் ஓர் அனுபவம் என்றால் வரலாற்றின் ருசி, வருகிற தலைமுறையும் அறிய வேண்டியதல்லவா?

எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா, ‘வந்தியத்தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்’ என்ற தலைப்பில் பொன்னியின் செல்வனில் விரியும் நிலப்பரப்பை அதன் சரித்திரப் பின்னணியுடன் ஆவணப்படுத்தும் முயற்சியாக ஓர் ஆவணப் படத்தை உருவாக்கியிருக்கிறார். வந்தியத்தேவன் தன் பயணத்தைத் தொடங்கிய வீரநாராயணபுரம் என்கிற வீராணத்திலிருந்து, கடம்பூர், திருப்புறம்பியம், கோடியக்கரை என்று பயணித்து கடல்மல்லையில் முடியும் இந்த வீடியோ பதிவை விரைவில் ‘கல்கி ஆன்லைன்’ தளத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

மொத்தம் பதினைந்து பாகங்கள். ஒவ்வொன்றும் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள்.

காலச்சக்கரம் நரசிம்மாவிடம் இந்தப் பயணத்தின் சுவாரசியங்களைச் சொல்லும்படி கேட்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • மிக அருமையான கட்டுரை. அரிதான பல்வேறு தகவல்கள்.வரலாறுக்கென்றே தமிழில் ஒரு சேனல் திட்டம் மகத்தானது.விரைவில் தொடங்க மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    108 வைணவ தலங்கள் மற்றும் பாடல் பெற்ற சிவதலங்களுக்கு செல்லும் ஆவலும் ஆர்வமும் பக்தியும் இருப்பது போன்ற உணர்வு தான் வந்திய தேவன் சென்ற வழியில் நாமும் செல்வதும்.கேட்கவே பரவசமாக உள்ளது.அந்த காணொளியை காண தீராத ஆர்வம்.பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கவும் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளோம்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!