Home » Archives for August 2022

இதழ் தொகுப்பு August 2022

நகைச்சுவை

தலையாய பிரச்சனை

நடுத்தர வயதைத் தொட்டு விட்டால் சிலருக்குத் தலைமயிர் பிரச்சனை வந்து விடுகிறது. தலைமுடி உதிர்ந்து, பாலைவனமாகக் காட்சியளிப்பதையும், ப்ளேக்ரவுண்டின் ஓரத்தில் மட்டும் புல் முளைத்திருப்பது போல சொட்டைத் தலையின் ஓரங்களில் மட்டும் சொற்ப முடிகள் இருப்பதையும் சொல்லவில்லை…. பலருக்கு முப்பது முப்பத்தைந்து...

Read More
நம் குரல்

இலவசங்களும் ஏழைத்தாயின் மகனும்

‘இலவசங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கின்றன’ என்று கடந்த ஜூலை மாதத்தில், நமது மாண்புமிகு பிரதமர் மோடிஜி போகிற போக்கில் ஒரு போடு போட்டார். அது போதாதென்று, ‘தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள், நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

அதிகாராதிபதி

உலகில் வேறெந்த நாட்டு ஜனாதிபதிக்கும் இவ்வளவு அதிகாரங்கள் இருக்காது. இலங்கை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் எல்லை கடந்தவை. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டு இலங்கை குடியரசானபோது முதலாவது அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கவர்னர் ஜெனரலாய் இருந்த வில்லியம் கோபல்லாவ என்பவர் ஜனாதிபதியாகிக்...

Read More
வரலாறு முக்கியம்

எது இயல்பு? எது மாற்று?

நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று விசாரித்து விட்டு மருந்துகளை அளிக்கிறார். அந்த மருந்துகளில் குணமாகிவிட்டால் நாம் அதோடு விட்டு விடுகிறோம். அந்த மருந்துகளால் குணமாகவில்லையென்றால்...

Read More
வென்ற கதை

‘இங்கே ரகசியங்கள் ஏதுமில்லை’ – டாக்டர் சரவணகுமார்

தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது தந்தையால் தேனியில் தொடங்கப்பட்ட தன்வந்திரி வைத்தியசாலை இன்று சென்னை, திருவண்ணாமலை, மதுரை நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 14

உள்ளூர எப்படி இருந்தாலும் சைக்கிளில் ஒரு காலும் பிளாட்பாரத்தில் ஒரு காலுமாக, குர்த்தாவும் ஜீன்ஸும் தாடியுமாக சூரியன் மறைந்த மஞ்சள் வெயில் வெளிச்சத்தில் பார்க்கப்பார்க்கத் தான் ரொம்பவும் அம்சமாக இருப்போம் என்று தோன்றிற்று. 14. ஒரு சைக்கிளின் கதை அவன் அப்பா DOS ஆக இருந்ததால், டைப் IIIல் கிடைத்திருந்த...

Read More
உலகம்

சர்ச்சைகளின் நாயகி (அல்லது) சன்னா மசாலா

இருபத்து ஏழு நாட்டுத் தலைவர்கள் ஒரே ஃப்ரேமில் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று 2019ம் ஆண்டு வெளியானது. அந்த இருபத்து ஏழில் ஒரே ஒருவரை முன்னிட்டு, அந்த சாதாரணப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. அவர் ஒரு பெண். அதுவும் இள வயதுப் பெண். அசப்பில் கல்லூரிப் பெண் தோற்றம். சாதாரண ஏழைக் குடும்பத்தில்...

Read More
மருத்துவ அறிவியல்

தொடாமல் நீ மலர்வாய்!

துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் சில நொடிகள் பதற வைத்தது. சட்டென்று திரும்பிப் பார்க்கும் போது, கடைக்கு வெளியே ஐந்து வயதுச் சிறுமியொருத்தி வாசலில் விழுந்து கிடந்தாள். அவளது தாய்...

Read More
அரசியல் வரலாறு உக்ரையீனா

உக்ரையீனா – 14

14. சர்வ நாச பட்டன் அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் அதன் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம். ரஷ்யாவின் அணு ஆயுத சொகுசு சௌகரியங்களைக் கண்காணிப்பதற்கென்று அமெரிக்காவும் அதன் தோழமை (ஐரோப்பிய) தேசங்களும் இணைந்து ஒரு நிழல் உளவுத் துறையையே உருவாக்கிச் செயல்பட வைத்திருந்தன. இது ரெகுலர் உளவுத் துறையல்ல. அணு...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 14

14. ஆம் என்பது ஆன்மா சத்தியத்தை எதற்காகவும் இழக்காதீர்கள். சத்தியத்தைக் காக்க எதையும் இழக்கலாம். – ஓஷோ உண்மை என்பது சத்தியம். சத்தியம் சிவம் சுந்தரம் என்ற மூன்று வார்த்தைத் தாரக மந்திரத்தில் முதல் வார்த்தை சத்தியம். சத்தியம் என்பதை உண்மை என்றும் கூறலாம். ஓஷோ Truth என்று அழைப்பதை நாம் சத்தியம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!