Home » பேய் மால்
ஷாப்பிங்

பேய் மால்

மக்கள் நடமாட்டமில்லாத வளாகங்கள். பார்வையாளர்கள் இல்லை. பேரமைதி. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிறிய மால்களின் தற்போதைய நிலை இதுதான். மக்கள் செல்லாமல் காற்று வாங்கும் மால்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. பொருட்களை ஆன்லைனில் வாங்கிவிடுவதால் மக்கள் மால்களுக்குச் செல்வது குறைந்து விட்டது என்றொரு புள்ளிவிவரம் வெளியிட்டிருக்கிறது ஓர் ஆலோசனை நிறுவனம்.

மக்கள் அதிகமாகச் செல்லாத, பெரும்பாலான கடைகள் காலியாக இருக்கும் மாலுக்கு ‘கோஸ்ட் மால்’ என்று பெயர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பத்து ஏழு சதவிகிதமாக இருந்த கோஸ்ட் மால்கள் இந்த ஆண்டு அறுபத்து நான்கு சதவிகிதமாக அதிகரித்திருக்கின்றன. இதனால் கடைகளில் பணி புரிபவர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்புகளும், சிறு வணிகர்களுக்கும் சேவை வழங்குபவர்களுக்கும் மிகப் பெரிய பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படும் என்று நைட் ஃபிராங்க் இந்தியா என்கிற ஆலோசனை நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சிறிய மால் ஆரம்பித்த புதிதில் கொஞ்ச காலம் மட்டும் பொலிவுடன் உள்ளது.
    யானையை கட்டி தீனி போட்ட கதை தான்..
    ஒரு காலத்தில் ஸ்பென்சர் ப்ளாஸா ஜே ஜேன்னு திருவிழா கூட்டமா இருக்கும்.சமீபத்தில் பார்த்த போது வாழ்ந்து கெட்ட குடும்பம் போல அதிர்ச்சியா தான் இருக்கு..புதிது புதிதாய் மால்களும் வந்து கொண்டு தான் உள்ளன.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!