Home » G இன்றி அமையாது உலகு – 5
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 5

5. தேடு`பொறி`

லாரியும், செர்கேவும் பின்னாளில் கூகுளை உருவாக்குவதற்கு முன்பு இணையத்தில் தேடுபொறிகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறதுதானே..? இருந்தன. ஸ்பைடர் அல்லது க்ராலர் என்றும் பெயர் சூட்டப்பட்ட அவை, ஏனோதானோவென்று பெயருக்காக ஒரு ஓரத்தில் சர்ச் எஞ்சின்களாக இருந்தனதான். ஆனால் பெயருக்கேற்ற முழுப்பயனையும் அவை எடுத்துக் கொடுக்கவில்லை.

உதாரணமாக, ஃபிலிப்ஸ் என்கிற பிரபல ரேடியோ நிறுவனம் பற்றித் தேட அந்த வார்த்தையை உள்ளிட்டால், இப்போது மிகச்சரியாக அது முதல் தரவாக அந்த ரேடியோ நிறுவனத் தளத்தைக் கொண்டு வந்து காட்டுகிறது இல்லையா?. அந்த அளவிற்கு மிகக்கூர்மையாக நிரல்கள் எழுதப்பட்டு அவ்வவற்றின் இணையத்தளங்களில் இணைக்கப்படுகின்றன. ஆனால் அந்தக் காலத்தின் கதையே வேறு. எந்த இணையத்தளம், ஃபிலிப்ஸ் என்கிற வார்த்தையை அதிகம் கொண்டிருக்கிறதோ அதைத்தான் முதலில் கொண்டுவந்து நிறுத்தும்.

இப்படி வைத்துக் கொள்ளலாம். சென்னைப் பட்டணத்தின் பிரபல ரேடியோ ரிப்பேர்க்காரர் ஒருவர் தன் பெயரை அந்த ரேடியோ பிராண்டின் (brand) பால் ஈடுபாடு கொண்டு, ஃபிலிப்ஸ் என்றே மாற்றிக்கொண்டு அவருக்கு ஒரு இணையத்தளத்தையும் ஏற்படுத்திக் கொண்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதில் தன்னைப்பற்றிய சுயவிவரத்தில்,

”ஃபிலிப்ஸ் ஆகப்பட்டவர், ஃபிலிப்ஸ் ரேடியோக்களை அதிகம் ரிப்பேர் செய்து புகழ் பெற்றதால் தன் பெயரை ஃபிலிஸ்ப் என்றே மாற்றிக் கொண்டுவிட்டார். இச்சமயம் ஃபிலிப்ஸ்ஸுக்கு, ஜாஸ்மின் ஃபிலிப்ஸ் என்ற மனைவியும், செம்பருத்தி ஃபிலிப்ஸ், ரோஜா ஃபிலிப்ஸ், கனகா ஃபிலிப்ஸ் என்ற மகள்களும் உள்ளனர். ஃபிலிப்ஸ் வீட்டில் வளரும் நாய்க்கு டாமி ஃபிலிப்ஸ் என்று பெயர். அந்த நாய்க்குப் பழைய ஃபிலிப்ஸ் ரேடியோக்களையே வைத்து, ஓனர் ஃபிலிப்ஸ் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்”

என்று ஒரு காப்பிரைட் பிரஹஸ்பதி எழுதிக் கொடுத்துவிட்டால், ஒவ்வொரு முறையும் ஃபிலிப்ஸ் எனத் தேடும்போது அது ரேடியோவை விட்டுவிட்டு டாமி ஃபிலிப்ஸ் வீட்டிற்கு முதலில் வழிகாட்டிவிடும். இதுதான் அடிப்படைப் பிரச்னை. இதைத்தாண்டி இதை எப்படித் தீவிரமாக அணுகுவது என்று புரியாது விழிபிதுங்கிக் கொண்டிருந்தது நுட்ப உலகு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!