Home » Archives for August 2022 » Page 8

இதழ் தொகுப்பு August 2022

இந்தியா பத்திரிகை

சரித்திரத்தில் இடம் பிடித்த சாதாரணங்கள்

ஆகஸ்ட் 15, 1947 – வெள்ளிக்கிழமை. அன்று காலை வெளியான தினசரிகள், வார இதழ்களில் எப்படியும் நாடு சுதந்திரமடைந்த செய்தி நிறைந்திருக்கும். அதைத் தவிர வேறு என்ன வந்திருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். நள்ளிரவு பன்னிரண்டு வரை காத்திருந்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சேர்த்திருப்பார்கள்...

Read More
சிறுகதை

இருள்

கனவில் மிகப்பெரிய ஹார்ன் சப்தம் ஒன்று அலறலாய்க் கேட்டது. தாமு திடுக்கிட்டுக் கண் விழித்தான். அப்பார்ட்மெண்ட் கேட்டுக்கு வெளியில் கார் என்ஜின் சப்தம் கேட்டது. தாமு தடுமாறி எழுந்து ஓடினான். B-S4 கணேசன் சாரின் ஃபோக்ஸ்வேகன் உருமலோடு நின்றிருந்தது. ட்ரைவர் சீட்டிலிருந்து கணேசன் சார் முறைப்பான...

Read More
நுட்பம்

நீலப் பல் மகாராஜா

ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று...

Read More
நம் குரல்

திராவிட மாடலும் சில முகமூடிகளும்

ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளை முழுமையாகக் கொடுத்திருப்பார்கள். பலர் தங்கள் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பார்கள். அதற்குக் காரணம்...

Read More
சமூகம்

கல்யாண மார்க்கெட்: பெண்கள் படும் பாடு

பையன் ரெடியாக இருக்கிறான்; பெண் கிடைத்தபாடில்லை என்பதுதான் திருமண மார்க்கெட்டில் இன்று அதிகம் வாசிக்கப்படும் புலம்பல் பா. ஆனால் அதுதானா உண்மை? திருமணத்துக்குக் காத்திருக்கும் ஏராளமான பெண்களும் களத்தில் இருக்கவே செய்கிறார்கள். ஏதேதோ காரணங்களால் திருமணம் தள்ளிப் போகிற வருத்தம் அவர்களுக்கும் இல்லாமல்...

Read More
உலகம் தீவிரவாதம்

அய்மன் அல் ஜவாஹிரி: ஒரு நிரந்தர நம்பர் 2வின் மரணம்

1999ம் ஆண்டு ஒரு மரண தண்டனை அறிவிப்பு (எகிப்து). 2001ம் ஆண்டு தலைக்கு இருபத்தைந்து மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிப்பு (அமெரிக்கா). 2004ம் ஆண்டு அதிக உலக நாடுகள் தேடுகிற அபாயகரமான மனிதர்களின் பட்டியலில் இரண்டாமிடம். மே 2, 2011 ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடன் இறந்ததில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை...

Read More
பொருளாதாரம்

தயாராகு தாய்க்குலமே, தங்கம் விலை குறையும்

விலைவாசி ஏற்றம் உலகம் முழுதும் கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அமெரிக்காவில் இப்போது வரலாறு காணாத வட்டி விகித ஏற்றம் நடைமுறைக்கு வருகிறது. மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இதன் பின்னணி மிகவும் நுட்பமானது. கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி நான்காவது...

Read More
சமூகம்

கல்யாண மார்க்கெட்: ஆண்கள் படும் பாடு

பையன் ஏதாவது ஒரு வேலையில் இருந்தாப் போதும் என்பதே பெரும்பான்மையான 80ஸ் கிட்ஸ் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தப் பெண்களும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றவர்கள் சொல்லும் பையனைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் – அதாவது இக்காலப் பெண்கள் திருமணத்திற்கு...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 10

ப்ராக்டிகலா யோசி. உனக்குப் பிடிச்ச காரியம் எழுதறது, இல்லையா. தமிழ்ல எழுதி மட்டுமே பொழைக்க முடியுமா. கசடதபறல ஆரம்பிச்சாலும் இன்னைக்கு குங்குமம் விகடன் குமுதத்துக்கு எழுதற பாலகுமாரன் மாதிரி உன்னால கமர்ஷியலா எழுதமுடியுமா… 10 கூச்சம் டிரைவ் இன் கூடப் புழுங்கியது. எங்கோ வெறித்தபடி காபி...

Read More
உலகம் உளவு

உலகெலாம் உளவு

கடந்த வாரம் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தமது செல்பேசி ஹேக் செய்யப்பட்டிருப்பதாகத் தமக்குச் சந்தேகம் உள்ளதென ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதற்கு ஒன்றிரண்டு தினங்கள் முன்னதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. முக்கிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் திறன்பேசியை (Smart Phone)...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!