ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
வணக்கம்
இந்தப் பத்திரிகை வெளிவரத் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. நாளை ஆண்டு விழா.
தமிழில் எளிமையாகவும் தரமாகவும் பல்வேறு துறைகள் சார்ந்து ஆழமாகவும் எழுதத் தெரிந்த ஒரு புதிய தலைமுறைக்கான களமாகத் தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் பேப்பர். தமிழ் வார இதழ்களுக்கே உரிய கல்யாண குணங்கள் ஏதுமின்றி, ஒரு மாறுபட்ட அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்க நினைத்தோம். நினைத்ததைச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அளிக்கும் வரவேற்பின் மூலம் அறிகிறோம்.
இந்த ஐம்பத்து மூன்று வாரங்களில் சுமார் நாற்பது புதிய எழுத்தாளர்களை மெட்ராஸ் பேப்பர் தமிழுக்குத் தந்திருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், இருபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், பதினேழு உலகச் சிறுகதைகள், சற்றும் சமரசமற்ற உயர் தரத்தில் ஒரு நாவல் -
தவிர, நமது எழுத்தாளர்கள் பன்னிரண்டு பேரின் பதிமூன்று புத்தகங்கள் இந்த ஆண்டில் வெளியாகியிருக்கின்றன. எழுதக் கற்றுக்கொண்டு, ஓராண்டு முழுதும் எழுதி எழுதிப் பழகி, பிறகு பத்திரிகைக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி, அதில் தேர்ச்சி பெற்றுப் புத்தகமும் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய தமிழ் பதிப்புச் சூழலில் சந்தேகமின்றி சாதனை. நல்ல எழுத்தை எப்போதும் கொண்டாடுவோம்.
நிற்க. நாளை (ஜூன் 1, 2023) மாலை இந்திய நேரம் 7 மணிக்கு மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாக் கொண்டாட்டம் zoom வழியே நடக்கிறது. நூறு பேர் இதில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலும். பிறரும் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க ஸ்ருதி டிவி யூட்யூப் நேரலை செய்கிறது. நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்டு, நமது பத்திரிகையின் எழுத்தாளர்கள் / செய்தியாளர்களுடன் கலந்துரையாட விரும்புவோர் 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்து zoom link பெறலாம்.
இந்நிகழ்ச்சியில் ‘கல்கி’ சீதா ரவி, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே. அசோகன் இருவரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். ‘நேர்காணல் செய்யும் கலை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் எஸ். சந்திரமௌலியும் ‘எழுத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யாவும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். மெட்ராஸ் பேப்பர் இதுவரை செய்தவை குறித்து ஆசிரியரும் தொழில்நுட்ப ஆலோசகரும் உரையாற்றுவார்கள். பிறகு, ‘இனி என்ன செய்யலாம்?’ என்ற தலைப்பில் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவினருடன் வாசகர்கள் நேரடியாகக் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தந்து உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் அளிக்கலாம்.
மெட்ராஸ் பேப்பரின் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம்.
நாளை மாலை விழாவில் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம்...
அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...
இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு...
உலகைச் சுற்றி
கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
மேலும் ரசிக்க
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...
மரியா லூயிஸா பொம்பால் ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...