Home » Archives for April 2023 » Page 5

இதழ் தொகுப்பு April 2023

இந்தியா

கைகொடுப்போர் எத்தனை பேர்?

பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும்...

Read More
கிருமி

மீண்டும் மீண்டும் கோவிட்

மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது கோவிட். சென்ற வருடம் முழுக்க அதை மறந்திருந்தோம் அல்லது அதைப் பற்றி நினைக்க விரும்பாமல் ஒதுக்கி வைத்திருந்தோம். இப்போது பயப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என்றாலும் திரும்ப அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா மீண்டும்...

Read More
நம் குரல்

ரம்மி அரசியல்

ஒரு வழியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த, சமூக அக்கறை மிக்க ஒரு முன்னெடுப்பை இப்படி அரசியலாக்கி, இழுத்தடித்து ஊர் சிரிக்கும்படிச் செய்திருக்க அவசியமில்லை. ஆளுநர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 20

வரும் முன் காப்போம் இதுவரை இம்யூனோதெரபி சம்பந்தமாக நாம் பார்த்து வந்த அனைத்துமே புற்றுநோய்க்கான மருந்துகள். அதாவது நோய் வந்தபின் அதனைத் தீர்க்க அல்லது நோயின் அறிகுறிகளை மட்டுப்படுத்த அல்லது நோயாளிகளின் வாழ்நாளினைச் சிலகாலம் நீட்டிக்க உதவும் காரணிகள். நோய் வந்தபின் அதனுடன் போராடுவதைவிட நோயே வராமல்...

Read More
கல்வி

உதவாத படிப்புகள்

பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் இருபத்தியொரு பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் / படித்து முடித்திருக்கும் அத்தனை மாணவர்களும் பேச்சற்றுப் போயிருக்கிறார்கள். கல்வி...

Read More
கணினி

சொகுசு முக்கியம்!

நமது சராசரி வேலைநேரம் கூடியிருக்கிறது. ஏனெனில் இப்போதெல்லாம் பெரும்பாலான வேலைகள் நேர அளவில் இல்லாமல் பொறுப்பு என்னும் அளவுக்கு மாறியிருக்கின்றன. “இத இன்னைக்குள்ள முடிச்சுடுங்க” என்று உங்கள் பாஸ் சொல்லிவிட்டால் அந்த வேலை முடியும்போது தான் இன்றைய உங்களது வேலைநாள் முடியும் என்று அர்த்தம். பாஸ்...

Read More
உலகம்

தப்பித்தால் தப்பில்லை

திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச்...

Read More
உலகம்

புதிய உலக ஒழுங்கு (அல்லது) பணக்கார விளையாட்டு

இருபது வருடங்களுக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் எழுபது சதவீதத்திற்கு மேலாக பளபளப்பு மிகு எஜமானனாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாலரின் வகிபாகம், சைனா- சவூதி- ரஷ்யா கூட்டால் ஐம்பத்தொன்பது சதவீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையிலிருந்து டாலரைக் காலியாக்கும் திட்டத்துடன் இக்கூட்டணி அமோக வீச்சில்...

Read More
உலகம்

ஸ்காட்லாந்தின் பாகிஸ்தானி முதலமைச்சர்

பெயர் ஹம்சா ஹரூன் யூசஃப். வயது முப்பத்தேழு. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தத் தகவல்களைச் சொல்லும்போது “யாரிவர்?” என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இங்கிலாந்தில் வாழும் பலருக்கே இந்தப் பெயருக்குரிய பிரபலம் யாரென்று அண்மைக்காலம் வரை தெரிந்திருக்காது. இவர்தான்...

Read More
சுற்றுலா

சிங்களத்தின் தாய்மொழி!

முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!