Home » மெய்நிகர் ஆடை போதும்!
இன்குபேட்டர்

மெய்நிகர் ஆடை போதும்!

ஆடைகளை வாங்கும்போது முக்கியமான பிரச்சினை அவை நமக்கு அளவாக இருக்குமா? என்பதே. எந்த ஒரு ஆடையையும் அணிந்து பார்க்காமல் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பொதுவாக சைஸ் என்று ஒன்று லேபலில் போட்டிருப்பார்கள். அது அளவுக்கான ஒரு அண்ணளவான வழிகாட்டி மட்டுமே. அதை மட்டுமே நம்பி நமக்குச் சரியாகப் பொருந்தும் என்று வாங்கி விடமுடியாது. பிராண்ட் மற்றும் ஆடையின் வடிவமைப்புகள் போன்றவற்றால் சைஸ் வித்தியாசங்கள் இருக்கும். இந்தப் பிரச்சினை பெண்களுக்கு மட்டுமல்ல…. ஆண்களுக்கும் உண்டு.

பெரும்பாலான கடைகளில் அணிந்து பார்ப்பதற்காக ஃபிட்டிங் ரூம் என்று சில அறைகள் இருக்கும். மிகவும் பிசியான கடைகள் என்றால் ஃபிட்டிங் ரூம் வாசலில் வரிசைகள் நிற்பதுவும் உண்டு. பொதுவாக ஃபிட்டிங் ரூமுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையளவு ஆடைகள் மட்டுமே எடுத்துச் செல்ல விடுவார்கள். அந்த எண்ணிக்கையானது கடைக்குக் கடை மாறுபடும்.

ஒரு கடைக்குப் போய் விருப்பமான ஆடையைக் கண்டுபிடிப்பது ஒரு வேலை. அதன்பின் ஒரு ஃபிட்டிங் ரூம் வரிசையில் நின்று நேரம் செலவழிக்க வேண்டும். பின்னர் நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களைந்து, வாங்கிய ஆடையினைப் போட்டுப் பார்க்க வேண்டும். பின்னர் மீண்டும் உங்கள் ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஃபிட்டிங் ரூமில் உள்ள கண்ணாடியில் முழுமையாகப் பார்ப்பதும் சில கடைகளில் முழுமையான அனுபவத்தைத் தராது. இவ்வளவு அசௌகரியங்களையும் இல்லாமல் பண்ணும் தொழில்நுட்பமே Virtual Fitting Room.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!