Home » அட்சய திருதியை அட்டகாசங்கள்
சமூகம்

அட்சய திருதியை அட்டகாசங்கள்

அட்சய திருதியை – சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு பண்டிகை இருப்பதே பலருக்கும் தெரியாது. தெரிந்த சிலரும் உப்பு, மஞ்சள் வாங்கி, இறையை வணங்கி எளிமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இன்று நிலைமை தலைகீழ். அட்சய திருதியையில் கடன் வாங்கியாவது நகை வாங்க வேண்டும். ‘அன்று வாங்கும் ஒரு பொட்டுத் தங்கம் பட்டுப் பட்டாய் பல்கிப் பெருகும்’ என்னும் நம்பிக்கை அடிமனத்தில் வேர்கொண்டு விட்டது.

எப்போதிலிருந்து இந்த நம்பிக்கை தொடங்கியது? யார் தொடங்கி வைத்தது? அறிவதற்கு முன்னால் அக்ஷய திருதியை பண்டிகையைப் பற்றிப் பார்த்து விடலாம். பண்டிகை என்றாலே, அதற்குப் பின்னால் புராணக் கதை ஒன்று இருக்குமல்லவா? இந்தப் பண்டிகைக்குப் பின்னால் ஒன்றல்ல…. ஒன்பது கதைகள் இருக்கின்றன.

இந்து மதத்தில் மொத்தம் நான்கு யுகங்கள் சொல்லப் படுகின்றன. முதலில் கிருத யுகம், இரண்டாவதாக திரேதா யுகம், பின் துவாபர யுகம், கடைசியாகக் கலியுகம். இதில் இரண்டாவதாக வரும் திரேதா யுகத்தைப் பிரம்மன் படைத்த முகூர்த்த நாள் – அக்ஷய திருதியை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!