Home » மாலை வாங்கு; அல்லது வாயை மூடு!
ஆன்மிகம்

மாலை வாங்கு; அல்லது வாயை மூடு!

“போன வாரம்தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இல்ல….? அவர் வந்துட்டுப் போனார். அதுக்கு முந்தி யோகிபாபு, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ராதாரவி, தாடி பாலாஜி அப்புறம் அந்த அய்யப்பன் பாட்டு பாடுவார்ல…. வீரமணி ஐயா அவர் வந்துட்டு போனார். இது தவிர முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து போய்ட்டு இருக்காங்க. அவங்க பேர் சொல்ல முடியாது சார். பிரச்னை ஆயிடும். இந்த ஊருக்கும் கோயிலுக்கும் இதுமாதிரி செய்திகளாலயும் கொஞ்சம் புகழ் வரஆரம்பிச்சுடுச்சு. சக்தி வாய்ந்த முருகன் சார் இவரு. இங்க வேண்டிட்டு ஒன்பது வாரம் வந்து பாருங்க. அப்பறம் சொல்லுங்க” என்றார் கோயிலுக்கு வெளியே கடைபோட்டிருக்கும் ஒருவர்.

திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரத்திலிருந்து பிரிந்து உள்ளே போகும் சாலையில் உள்ள சின்ன ஊர் ராமலிங்கம்பட்டி. இதில் அமைந்துள்ள அருள்மிகு பாதாளச்செம்பு முருகன் கோயில்தான் அவர் குறிப்பிட்ட கோயில். பொதுவாக மலைமேல், தரை மேல் என்று முருகன் கோயில்களைப் பிரித்து வைப்பது வழக்கம். பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், ஸ்வாமி மலை, மருதமலை என்று குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று மக்கள் வழிபட்டு வருகிறார்கள். திருச்செந்தூர் தரைமேல் இருந்தாலும் கடல்மேல் அமைந்துள்ள முருகன் என்கிற தனிப் பெருமை அதற்கு உண்டு. ஆனால் தரையிலும் இல்லாமல், மலையிலும் இல்லாமல் பாதாளத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் தன்மையே ஒரு பேசுபொருளாகி இருக்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்ல வெளியூர் வெளி மாநிலங்கள்வரை இந்தக் கோயில் பற்றித் தெரிந்து படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். கோயிலைத் தவிர இங்கு விற்கப்படும் கருங்காலி மாலைகள் பற்றிய பேச்சும் அதிகமாக இருக்கிறது. என்னதான் இருக்கிறது அங்கே என்று பார்க்கக் கிளம்பினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சில நேரங்களில் சில கோயில்கள் பிரபலம் அடைகின்றன. எங்கள் ஊர் பக்கம் சிறுவாபுரி முருகன் கோயில் இப்போது உலகளவில் பிரசித்தமாக இருக்கிறது. நாற்பது வருடம் முன்பு பூஜைக்கே வழியில்லாமல் இருந்தது. இதுவும் ஆண்டவன் லீலைதான் போலும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!