முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில் கிராமத்திற்குள் சரியாக உள்ளிட வேண்டும். நாங்கள் பார்க்கப்போவது இலங்கையின் தொன்மையான பழங்குடி மக்களை. பழங்குடிகளுடன் இணக்கமாவதும், உண்மையான மனிதர்களைக் கண்டறிவதும், அவர்களுடன் பழகக் கிடைப்பதும் எடுத்த எடுப்பிலேயே நிகழ்ந்துவிடுவதில்லை. அவர்களின் மதமும், மொழியும், சடங்காச்சாரமும் முற்றிலும் மாறுபட்டவை. இன்று பழங்குடிகள் வாழ்கிற பல நாடுகளில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சுற்றுலாமயப்படுத்தப்பட்டு விட்டனர். அவ்வாறான பழங்குடி கிராமங்களில் வலிந்து உருவாக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் போகிற இடத்தில் முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கான விடயங்களே உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பயணத்தில் இயல்பான ஆதிகுடிகளைச் சந்திக்க வேண்டும். அது மட்டும்தான் மனதில் இருந்தது. எப்படி இதுவெல்லாம் நடக்கப்போகிறது எனும் மனநிலைதான்.
இதைப் படித்தீர்களா?
32. உயர்ந்தது நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை...
32. புனிதப் பயணம் 1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக...
Add Comment