Home » Archives for April 2023 » Page 4

இதழ் தொகுப்பு April 2023

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 21

துணிவின் தலைமகன் வேலை தேடி நாநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள். ஒரே ஒரு நிறுவனம்தான் பதிலளித்தது. மற்றைய நிறுவனங்கள் அனைத்தும் அவரது வேலைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தன. இத்தனைக்கும் இவரது கல்வித் தகைமைகளில் ஐஐடி வாரணாசியில் மின் பொறியியல் பட்டம். பின்னர் அமெரிக்காவின் நோர்த்ஈஸ்டர்ன்...

Read More
உலகம்

குரங்கு பிசினஸ்

“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...

Read More
சுற்றுலா

யார் இந்தப் பூர்வகுடிகள்?

இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி...

Read More
உலகம்

தயிர் சாதம், இட்லிப் பொடி, சித் ஶ்ரீராம் மற்றும் தமிழ்

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம்...

Read More
கணினி

அப்டேட் ஆனால் ஆபத்தில்லை!

‘பிங்க் சிலிப்’ (Pink Slip) என்றிரு வார்த்தைகள். வாசிக்க அழகாய்த் தான் உள்ளன. ஆனால் அர்த்தம் கொடுமையானது. பிங்க் சிலிப் கொடுப்பது என்றால் ஒருவரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்புவது. நவயுக இளைஞர்களின் மிகப்பெரிய பயம் திடீர் வேலை இழப்பு. சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் விஷயங்களில் முக்கியமான...

Read More
முகங்கள்

குறுகத் தரித்தல்

நமது சமூக ஊடகங்கள் இன்றைக்கு நைட்டி குறித்த ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு நாம் மினி ஸ்கர்ட்டைக் குறித்துச் சிறிது தெரிந்துகொள்வோம். பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி, பழுப்புப்புரட்சி போன்ற புரட்சிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உணவு, பால், கடல் உணவு, காபி...

Read More
ஆன்மிகம்

மண் முந்தியோ? மங்கை முந்தியோ?

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் கோவில் ஒன்று இருக்கிறது! வேறு எந்தக் கோயிலிலும் சேர்த்துக் கொள்ளப்படாத தாழம்பூவால் ஸ்வாமிக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது! இராமநாதபுரம்...

Read More
தமிழ்நாடு

தீவுத்திடலில் டிரைவ் இன் உணவகம்

சென்னைத் தீவுத் திடலில் டிரைவ் இன் உணவகமும் திறந்தவெளித் திரையரங்கும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அங்கே பார்வையிடச் சென்றோம். தமிழ்நாடு சுற்றுலாத்துறைதான் இந்த ஏற்பாட்டைச் செய்து நடத்திக் கொண்டிருக்கின்றது. தீவுத் திடல் என்றாலே பொருட்காட்சி என்ற அடையாளத்தை மாற்றி ஆண்டு...

Read More
பெண்கள்

குழாயைத் திறந்தால் பணம் கொட்டும்!

சமையல் என்பது ஒரு கலை. நிறம், திடம், சுவை ஆகிய மூன்றையும் எப்படி மெருகேற்ற வேண்டும்? என்னென்ன பொடிகளை எப்போது கலக்க வேண்டும்? என்ன சேர்த்தால் என்ன கிடைக்கும்? எவ்வளவு சேர்க்க வேண்டும்? என்று பார்த்துப் பார்த்து வீடுகளில் பெண்கள் உருவாக்கும் மேஜிக்கல் போஷன் உணவு. முதலில் வீட்டு வாசல் வரை மட்டுமே...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -21

வ. ராமசாமி  (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!