திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்ற ஒலிசியா க்றிவ்ட்சோவா மீது தீவிரவாதக் குற்றம் சாட்டி ரஷ்ய அரசு வழக்குப் பதிந்தபோது அவர் வயது 19. அவர் செய்த குற்றம் சமூக வலைத்தளப் பதிவொன்றைத் தன் கல்லூரிக் குழுவில் பகிர்ந்தது.
இதைப் படித்தீர்களா?
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப்...
Add Comment