Home » சாத்தானின் கடவுள் – 4
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 4

4. பாப்பார சாமி

ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அதற்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து அதிக நாள் ஆகியிராததால் சென்னை பழகியிருக்கவில்லை. தலைமை ஆசிரியர், பதவி உயர்வில் கள்ளக்குறிச்சிக்குக் கல்வி அதிகாரியாகச் சென்றிருந்ததால் அப்போதுதான் சிறிது துணிச்சல் பெற்று வீட்டுக்குத் தெரியாமல் வெளியே சுற்றத் தொடங்கியிருந்தேன்.

வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து பஸ் ஏறி நகரத்துக்குச் செல்லும்போதெல்லாம் திகைப்பாக இருக்கும். தொலையாமல் பத்திரமாக மீண்டும் வீடு வந்து சேருவேனா என்று ஒவ்வொரு முறையும் கவலை எழும். பெரும்பாலான சமயங்களில் பஸ் டிக்கெட் எடுக்கப் பணம் இருந்ததில்லை. கவலையின் நிறையைக் கூட்டுவதில் அதுவும் பங்காற்றும்.

தாம்பரத்திலிருந்து பிராட்வே வரை செல்வதற்குப் பேருந்துகள் இருந்தன. அவை வராத நேரத்தில் பூந்தமல்லி வரை செல்லும் பேருந்து ஒன்று வரும். மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக உயர்நீதி மன்றம் வரை செல்லும் 21ஜி வழித்தடம் அப்போது கிடையாது. எனவே அந்த வழியில் ராஜா அண்ணாமலைபுரம் என்றொரு பிராந்தியம் இருப்பது தெரியாது.

விசாரித்துக்கொண்டே சென்று, ஒரு வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியவன், அவர் வீட்டைச் சென்றடையப் பத்து மணி ஆகிவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சுவாரஸ்யமான தேடல்..
    பழைய சென்னையை கண்ணுக்குள்ளே கொண்டு வருகிறது இந்த அத்யாயம்.
    “சிக்கினாலும் சிக்குவான்” 😅

  • சுவாரஸ்யமான தேடல்! உங்களைப் போன்று ஆர்வங்கள் இருந்தாலும் என்னிடம் தேடல் இல்லை. உங்களின் தேடல் நல்ல முறையில் வழிநடத்தி உயர்த்திவிட்டிருக்கிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!