Home » Archives for April 2023

இதழ் தொகுப்பு April 2023

நம் குரல்

தவறுகளின் தொடக்கப் புள்ளி

தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...

Read More
வெள்ளித்திரை

ஒரு படம் ஏன் பாதியில் நிற்கிறது?

கடந்த வாரம் நாளிதழில் செய்தி வந்தது. தமிழில் ஆயிரக் கணக்கான படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்கள். படங்கள் நின்று போவது நமக்குத் தெரியும். ஆயிரக் கணக்கிலா? விசாரிக்கக் களமிறங்கினால் ஆம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ரஜினிக்கும் சில படங்கள் பாதியில்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 22

புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் தடுப்பு மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக மட்டும்தான் கண்டுபிடிக்க இயலுமா? இல்லை. புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் உண்டு. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் தடுப்பூசி என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு நோய்க் காரணியையோ அல்லது ஆண்டிஜென் எனப்படும் நோய்க்...

Read More
நுட்பம்

கட்டங்களுக்குள் கவிதை எழுதுங்கள்!

கணக்குகள் போட, பல்வேறு மூலத்தரவுகளை விரைவாகப் பகுத்துப் பார்க்க, எந்த வகை அட்டவணைகளையும் எளிதாகச் செய்ய என அலுவலகங்களில் தினமும் பலநூறு முறை பயன்படுத்தப்படும் மென்பொருள் விரிதாள்கள் (ஸ்ப்ரெட் ஷீட்ஸ்). இதில் பிரபலமானது மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் அதைப் போன்ற கூகுள் ஷீட்ஸ். இந்த இரு நிறுவனங்களும் பல...

Read More
சமூகம்

பூப்போட்ட சட்டை

‘டயானா கட்’ வெட்டிய இளம்பெண்ணொருத்தி ராயல்நீல நிறத் துணியில் நுணுக்கமான பல் வர்ண நூல் வேலைப்பாடுடன் கூடிய உயர்ரக சூட் ஒன்றை அணிந்து பாதையில் நடந்து செல்கிறாள். பாதசாரிகள் அத்தனை பேரும் திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்கள். அந்த ஆடையின் வசீகரம் ஊருக்கு மிகப் புதிதாக இருந்தது...

Read More
உலகம்

கொதிக்கிறது சூடான்; வெடிக்கிறது கலவரம்

இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -22

கா.சுப்பிரமணியபிள்ளை (30.11.1888 – 03.12.1969) அறிமுகம் தொழில்முறையில் படித்தது வழக்கறிஞர் படிப்பு. தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் பயிற்சியும் கொண்டவர். நெல்லை மண் தமிழுக்கு அளித்த பல மாணிக்கங்களுள் ஒருவர். தமிழ் இலக்கிய வரலாறை முதன் முதலில் எழுதிய பெருமைக்கு உரியவர்...

Read More
உலகம்

சட்டைப்பையில் உயிர்; புத்தகப் பையில் எதிர்காலம்

நம்மூரில் தரைப்பாலங்கள் மழையால் தண்ணீரில் மூழ்கினால் கயிறுகட்டியோ அல்லது தோணி, அண்டா எனக் கிடைப்பதை வைத்தோ ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். வெனிசுவேலா நாட்டில், மாணவர்கள் ட்ரோசாஸ் எனப்படும் ஆபத்தான சட்டவிரோதப் பாதைகளில் நாடு கடந்து பள்ளிக்குப்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 47

47 அலைகள் கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. என்ன சொல்கிறார் இவர். ஒரே கடல்தானே. அது எப்படி ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று அவன் உள்ளூர எண்ணியதைப்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 22

செயல்முறைத் தலைவி உலகில் கார் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஓர் இருபத்தொரு வயது இளம்பெண் பணிக்குச் சேர்கிறார். இரவு நேர ஷிப்ட். அத்துடன் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனேகமானோர் ஐம்பதுகள் அறுபதுகளில் பிறந்த ஆண்கள். புதிதாக இயந்திரப் பொறியியல்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!