Home » தீரத் தீர திவால் நோட்டீஸ்!
உலகம்

தீரத் தீர திவால் நோட்டீஸ்!

இங்கிலாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பை மேலாண்மை போன்ற சில சேவைகள் குறைக்கப்படும் என்றும், கலைக்கூடம் போன்ற சில சொத்துக்கள் விற்கப்படும் என்றும், இருபத்தி ஐந்து நூலகங்கள் மூடப்படும் என்றும், நீச்சல் குளங்களின் இலவச சேவை நிறுத்தப்படும் என்றும், தெருவில்கூட விளக்குகளின் ஒளி குறைக்கப்படும் என்று அடுக்கிக் கொண்டே போகிறது பர்மிங்காம் நகர நிர்வாகம்.

என்ன கொடுமை சரவணன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 1890ல், பர்மிங்காம் நகரைச் சுற்றிப் பார்க்க வெறும் ஒரு ரூபாய் போதும் (ஆம். நம் ஊர்க்காசு ஒரு ரூபாய்தான்.) ஏனென்றால், அப்போது அங்கே அரசாங்கம் உங்களைச் செலவு செய்யவே விடாது. இதே அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், நீச்சல் குளங்கள், துர்க்கி பாத் என்று சொல்லப்படும் சர்வ சொகுசுக் குளியல் உள்பட அநேகமாக சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் எல்லாமே இலவசமாக இருக்கும். தவிர, நகரம் அவ்வளவு சுத்தமாக இருக்கும். தரையைப் பார்த்துத் தலைவாரிக் கொள்ளலாம் என்பது போல. ஒரு குப்பை இராது, சாக்கடை உடைத்துக்கொண்டு ஓடாது, மேடு பள்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லாத பால்வெளி போன்ற பாதைகள்..

போதும். சொன்னால் தீராது அந்த சொகுசு எல்லாம்.

இன்று பர்மிங்காமில் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் மூட்டை மூட்டையாகக் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. வீதி விளக்குகள் அழுது வடிகின்றன. நகர நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா, இயங்குகிறதா என்றே தெரியவில்லை.

ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த நகரம் ஏன் இப்படி மாறியது?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!