Home » 3டி கேக்
இன்குபேட்டர்

3டி கேக்

முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) பற்றி அறிந்திருப்பீர்கள். மூலப்பொருட்களைக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவில் அடுக்கடுக்காக அச்சிடுவதன் மூலம் முப்பரிமாணத்தில் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இது. இது எண்பதுகளின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். நாற்பது ஆண்டுகளில் சிறிது சிறிதாகப் பல வடிவங்களில் இத்தொழில்நுட்பம் பல துறைகளிலும் பரவிக் கொண்டு வருகிறது.

சாதாரணமாக நாம் பேப்பரில் அச்சிடும் போது வரைபடங்களையோ அல்லது எழுத்துக்களையோ மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற மென்பொருளில் உருவாக்குகிறோம். நாம் வரைபடங்களும் எழுத்துகளும் எங்கு என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் வடிவமைக்கிறோம். கணினித் திரையில் எமக்கு அது தாளில் எப்படி வரப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைப் பிரிண்டருக்கு அனுப்பும் போது சற்றும் பிசகாமல் நாம் எதிர்பார்ப்பதையே அது அச்சடித்துக் கொடுக்கிறதல்லவா..? நாம் உருவாக்கும் வர்ணங்களை உருவாக்கப் பல வர்ணங்களைக் கொண்ட மையினைப் பிரிண்டர் உபயோகப்படுத்துகிறது. அதேபோல்தான் 3D பிரிண்டிங் தொழில் நுட்பமும்.

உங்களுக்குத் தேவையான பொருளை டிசைன் செய்வதற்கான மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் நீங்கள் பொருளின் வடிவத்தையும் மூலப்பொருட்களையும் துல்லியமாக வடிவமைத்த பின்னர் அதை 3D பிரிண்டருக்கு அனுப்பினால் அது நீங்கள் கணினியில் வடிவமைத்த பொருளை உருவாக்கித் தருகிறது. தாளில் அச்சடிக்க வர்ண மைகளைப் பயன்படுத்துவது போல வடிவமைக்கப்பட்ட பொருளை உருவாக்க அதற்குத் தேவையான மூலப் பொருட்களை 3D பிரிண்டர் பயன்படுத்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!