Home » சாத்தானின் கடவுள் – 3
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 3

3. இரு வேறு ஃபாரினர்ஸ்

இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும் அரசினர் உயர்நிலைப் பள்ளியும் இருந்தது. தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு அப்படியே எதிர் வரிசை வகுப்புகளுக்குச் சென்று உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான்.

கேளம்பாக்கம் அப்போது மிகச் சிறிய கிராமம். நாலைந்து கடைகள். ஒரு டாக்டர் வீடு. ஒரு டூரிங் தியேட்டர். ஒரு கீரைத் தோட்டம். அதிகபட்சம் இருநூறு வீடுகள். மணிக்கொரு பல்லவன். எப்போதாவது காண்டீபன் பஸ் சர்வீஸ். அவ்வளவுதான். பக்கிங்காம் கால்வாய்க் கரையோரமாகக் காற்று வாங்கியபடி மெதுவாக நடந்து போனால் இருபது நிமிடங்களில் கோவளம் வந்துவிடும். உப்பு எடுப்பதுதான் பிராந்தியத்தின் முதன்மைப் பணி. வழி முழுதும் பனி கொட்டி உறைந்தாற்போல எங்கெங்கும் உப்புக் குவியல்கள் இருக்கும். தூள் உப்பு, அயோடைஸ்ட் உப்பெல்லாம் வராத காலம். மூட்டை மூட்டையாகக் கல் உப்பு ஏற்றிக்கொண்டு மாலை வேளைகளில் கோவளம்-கேளம்பாக்கம் சாலையில் எறும்பு வரிசை போல டிராக்டர்கள் போகும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • 4 வது பகுதி படித்துவிட்டு 3 வது பகுதிக்கு வந்தேன். இரண்டுக்கும் தொடர்பும் இருக்கிறது தொடர்பும் இல்லை. கமல் மாதிரி பேச வைத்துவிட்டீர்கள். ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனியாக படித்தாலும் சேர்த்து படித்தாலும் குழப்பம் இல்லை. நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. சாத்தானின் கடவுளை உள்வாங்க முடிகிறது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!