Home » எப்படி இருக்கிறது கலைஞர் மருத்துவமனை? – நேரடி ரிப்போர்ட்
தமிழ்நாடு

எப்படி இருக்கிறது கலைஞர் மருத்துவமனை? – நேரடி ரிப்போர்ட்

கொரோனா பெருந்தொற்று இரண்டாண்டுகள் உலகையே உலுக்கிப் போட்ட சமயம்… சென்னையின் ஓர் ஓரத்தில் (இரத்தப்பரி)சோதனைகளையே சாதனையாக செய்து கொண்டு அமைதியாக அமைந்திருந்தது கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் என்னும் சோதனைச் சாலை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிய, புல்லுக்குப் பொசிகிற நீர் போன்று இந்த கிங்ஸ் இன்ஸ்டிட்யுட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடத்தில் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவசரத்துக்கு ஆபத்பாந்தவனாக வடிவெடுத்தாலும் சில மாதங்களில் இதுவோர் குறிப்பிடத்தக்க மருத்துவமனையாக மாறியது.

நோய்த் தொற்று தணிந்து உலகம் மெதுவாக சகஜநிலைக்குத் திரும்பியதும், தமிழக அரசின் ராஜபார்வை கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டை விட்டு அகலவில்லை. இங்கேயோர் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டுவது என்று முடிவு செய்தார்கள். 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ. பரப்பளவில் தளங்கள் கொண்ட 3 கட்டடங்களைப் பதினைந்து மாதங்களில் கட்டி முடித்தனர். 1000 படுக்கைகளுடன் 240.54 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’யைக் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளான ஜூலை 15, 2023 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஒன்பது மாதங்கள் முடிந்த நிலையில் மருத்துவமனையின் செயல்பாடடைக் கண்டுணர ஒரு விசிட் அடித்தோம். கிண்டி ரயில் நிலையத்திலிருந்து, தொழிற்பேட்டை வழியாக சுமாராகப் பத்து பதினைத்து நிமிடம் நடந்தால் மருத்துவமனையை அடையலாம். இதே வழித்தடத்தில் சிற்றுந்து ஒன்றும் இருபது நிமிடங்கள் இடைவெளியில் இயங்குகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும், மருத்துவமனை திறக்கப்பட்டதாக பதிவான தேதி (ஜூலை 15,2024) சரியானதா?

    • எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டது. சுட்டியமைக்கு நன்றி – ஆ-ர்

  • தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனை பற்றிய தகவல்கள் மக்களிடம் இன்னும் சென்றடையவில்லை. சென்றடைந்தால் மக்கள் பயனடைவார்கள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!