Home » செருப்புகளின் ராஜா
தொழில்

செருப்புகளின் ராஜா

செருப்பும்கூட செல்வத்தின் அடையாளம். செருப்பு விற்றே நூறு பில்லியன் டாலர் சம்பாதித்து உலகப் பணக்காரராகி விட்டார். அவர்தான் 61 வயது கிறிஸ்டியன் லொபோட்டின். 40 வருடங்களுக்கும் மேலாகச் செருப்பு தொழிலின் ராஜா.

எப்படிச் செருப்பில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கு அவரின் தொழில் ரகசியத்தைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் லொபோட்டின் தயாரிப்பது ஸ்டிலெடோஸ் வகை செருப்பு. நம் ஊரில் அதன் செல்லப் பெயர் ஸ்டூல். முன்னங்கால் தரையோடு தரையாக இருக்க, பின்னங்கால் சுமார் 5 இன்ச்சு மேலே இருக்கும். அது என்ன செருப்பு..? கால் வலிக்காதா..? என்றால்,  கேட்கும் நம் வர்க்கத்தினருக்கு அது புரியாது. இந்தச் செருப்பை அணியும் போது பெண்கள் முன்னழகு பின்னழகு ஏறி, மகாபலிபுரம் சிற்பக் கூடத்தில் செதுக்கியது போல இருப்பார்கள். லொபோட்டின் செருப்பில் அந்த ரேஷியோ கச்சிதமாக இருக்கும். இன்று செருப்பு மட்டுமல்ல…. கைப் பை, அழகு சாதனப் பொருட்கள் என்று தொழிலை விரிவடையச் செய்துவிட்டார்.

இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொழிலைத் தொடங்கினார். சாதாரண உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தவர்.  1991-இல் பாரிசில் முதல் கடையைத் திறந்தார். இன்று இவரின்  மலிவான செருப்பின் விலையில்  ஒரு ஐபோன் வாங்கலாம். மொனாக்கோ நாட்டின் இளவரசி கரோலின் தான் இவரின் முதல் பணக்கார வாடிக்கையாளர். இப்போது இந்த ப்ராண்ட் செருப்பு அணிவது ஹாலிவுட்டில் ஒரு ஃபேஷன் ட்ரெண்ட் ஆகிவிட்டது. பாப் சிங்கர் டெய்லர் ஸ்விஃப்டிற்கு, ஒவ்வொரு இசை நிகழ்விற்கும் தனித்தனி பிரத்தியேக ஷூக்களை உருவாக்கித் தருகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அறியாத தகவல்கள் உள்ளடக்கிய அழகான கட்டுரை! வாழ்த்துகள்!

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!