Home » Archives for கோகிலா » Page 8

Author - கோகிலா

Avatar photo

உலகம்

சட்டைப்பையில் உயிர்; புத்தகப் பையில் எதிர்காலம்

நம்மூரில் தரைப்பாலங்கள் மழையால் தண்ணீரில் மூழ்கினால் கயிறுகட்டியோ அல்லது தோணி, அண்டா எனக் கிடைப்பதை வைத்தோ ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். வெனிசுவேலா நாட்டில், மாணவர்கள் ட்ரோசாஸ் எனப்படும் ஆபத்தான சட்டவிரோதப் பாதைகளில் நாடு கடந்து பள்ளிக்குப்...

Read More
புத்தகம்

ஐலேசா: தமிழில் ஒரு புதிய புரட்சி

ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...

Read More
முகங்கள்

வித்தியாசங்களைக் கொண்டாடுவோம்

ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப்...

Read More
உலகம்

தப்பித்தால் தப்பில்லை

திருடனைத் திருடன் என்றால் குற்றம் என்பது போல ரஷ்யாவில் போரைப் போர் என்றால் நடவடிக்கை பாயும். சமீப காலம் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையைப் போர் என்று ஒப்புக் கொள்ளவில்லை ரஷ்யா. போருக்கு எதிராக யார் கருத்துத் தெரிவித்தாலும் நடவடிக்கை பாய்ந்தது. இரண்டு வாரம் முன்பு ரஷ்யாவில் இருந்து தப்பித்துச்...

Read More
குற்றம்

கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?

ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக்...

Read More
தமிழ்நாடு

உரிமைத் தொகை: உள்ளும் புறமும்

செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும்...

Read More
உலகம்

உஸ்பெக் ஊழல் ராணி

உஸ்பெகிஸ்தான் அதிபரின் மூத்த மகள் குல்னரா கரிமோவா. கூகுஷா என்ற பெயரில் பாப் இசை நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆடை, ஆபரணங்கள் துறையில் கால்பதித்து ஃபேஷன் உலகில் வெற்றிகரமான தொழில் முனைவராக இருந்தவர். ஐநா உள்ளிட்ட பல உலகளவிலான அமைப்புகளில் உஸ்பெக் சார்பில் பொறுப்புகளில் இருந்தவர். அடுத்த அதிபராகும்...

Read More
கிருமி

லொக் லொக் என்றா கேட்கிறது?

கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும். இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு...

Read More
சமூகம்

ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்

பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது.  கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம்...

Read More
குற்றம்

ஓயாத மீடூ அலைகள்

எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!