ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஒன்றிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள், அதன் கதவின் அளவு, அங்கே செல்வதற்கான வழி, லிஃப்ட் என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகுதான் அவர் மகள் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இதைப் படித்தீர்களா?
5. கூச்சம் கூடாது 1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர்...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் –...
Add Comment