Home » Archives for கோகிலா

Author - கோகிலா

Avatar photo

உரு தொடரும்

உரு – 3

பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

Read More
ஆளுமை

டெய்லர் ஸ்விப்ட்: தொட்டதெல்லாம் பொன்

இந்தத் தலைமுறை அமெரிக்க இளசுகளில் 53 சதவிகிதம் பேர் தங்களை டெய்லர் ஸ்விப்ட் ரசிகர்கள் என்கிறார்கள். சுமார் இருபது வருடங்களாக பாப் இசை உலகில் டாப் இடத்தில் இருப்பதே பெரிய விஷயம். அதோடு, அவருடைய பொருளாதார வெற்றி ஒப்புவமை இல்லாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. டெய்லர் ஸ்விப்ட். ஈராஸ் டூர்...

Read More
உரு தொடரும்

உரு – 2

சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...

Read More
உரு தொடரும்

உரு – 1

1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...

Read More
உலகம்

ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...

Read More
இந்தியா

பாதுகாப்பையா பணயம் வைப்பது?

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும் இம்முறை பொதுவெளியில் பேசு பொருளாகியுள்ளன. இந்தியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய திசையில் இவ்விவகாரம் தற்போது சென்று கொண்டுள்ளது...

Read More
உலகம்

போரின்றி வேறில்லை

வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் தொண்டு நிறுவனத்தின் ஏழு உறுப்பினர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டதற்கு இரண்டு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துள்ளது இஸ்ரேல் அரசு. இன்னும் சிலரைக் கண்டித்துள்ளது. பைடன்- நெதன்யாகு. இருவரில் யார் அதிகபட்ச அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதில் போட்டி நிலவுகிறது. அந்த...

Read More
இந்தியா

ஆம் ஆத்மி: வளர்ச்சியும் கைதுகளும் சொல்வது என்ன?

காலம் எவ்வளவு வேகமாகச் செல்கிறது பாருங்கள்…. ஊழலை ஒழிப்போம் என்று கொடி பிடித்துக் கட்சி ஆரம்பித்த ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று ஊழல் வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கிறார்கள். அதுவும் பதவியில் இருக்கும்போதே முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பதவி வந்ததும் மாறி விட்டாரா? அல்லது...

Read More
இந்தியா

உபி எனும் தீர்மானிக்கும் சக்தி

இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்பது உத்திரப் பிரதேச மாநிலம். அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகள் உடைய இந்திய மாநிலம். மத அரசியல் மையம் கொண்டிருக்கும் மாநிலமும் இதுவே. இதைப் பாரதிய ஜனதா கட்சியின் தனிப்பட்ட சாதனையாகக் குறுக்கிவிட முடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்...

Read More
இந்தியா

தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்

கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது பழங்கதையாகிப் போனதையும் நாம் பார்க்கிறோம். சந்திரசேகர ராவ் கட்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கரைந்து கொண்டிருக்கிறது. இளைஞர் காங்கிரஸில் இருந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!