Home » ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்
சமூகம்

ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்

பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது.  கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அனிதாவின் மாமா இயக்கத் தொடர்பு இருக்கலாம் என்று இலங்கை ராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டவர். இவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தவர். கையில் குண்டுக் காயத்துடன் வீடு திரும்பிய நாளில்தான் அனிதாவின் அம்மா குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் முடிவை எடுத்தார்.

பணம், நகையோடு, கையில் சிக்கிய ஆவணங்களையும் அள்ளிப் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு மாட்டு வண்டியில் கடற்கரையை அடைந்தனர். கையில் இருந்த பணத்துக்குச் சிறிய மீன்பிடிப் படகுப் பயணம்தான் வாய்த்தது. சிலமணி நேரக் காத்திருப்புக்குப் பின் படகில் ஏறினர். அந்தச் சிறிய படகு நடுக்கடலில் நின்றுபோனது. கரை சேர்வோமா அல்லது குடும்பத்தோடு கடலில் மூழ்குவோமா எனத் தெரியாமல் கடந்தன சில மணி நேரங்கள். நல்வாய்ப்பாகப் பெரிய படகு ஒன்று வந்து அவர்களை இந்தியக் கரையில் சேர்த்தது. சிறிது நேரத்தில் விடிந்துவிடும், எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடும் என்றுதான் அனிதா அன்று நினைத்திருந்தார். முப்பதாண்டுகளைக் கடந்த பிறகும் அந்த விடியல் இன்னும் வரவேயில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!