Home » Archives for ஸஃபார் அஹ்மத் » Page 9

Author - ஸஃபார் அஹ்மத்

Avatar photo

உலகம்

துருக்கி தேர்தலும் ரஷ்ய, அமெரிக்க வேட்பாளர்களும்

அமெரிக்க அதிபர் தேர்தல் களேபரங்களுக்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் துருக்கி அதிபர் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் நடந்து ஓய்ந்திருக்கிறது. எழுபது ஆண்டுகாலப் பனிப்போரே ஒளிந்திருந்த இம்மாபெரும் தேர்தல் திருவிழாவில் அமெரிக்காவும், மேற்கு ஊடகங்களும் ஆறு கட்சிகளுடன் கலக்கல் கூட்டணி அமைத்த முன்னாள்...

Read More
உலகம்

நீதி கிலோ என்ன விலை?

‘ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸை அழைத்து வந்து ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் மகா மூளையாய்ச் செயற்பட்ட நபர்களின் முகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திடீரென்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இப்படித்தான் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியான போது கூட...

Read More
உலகம்

இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு!

கடந்த வருடம் ஜூன், ஜூலை காலப் பகுதிகளில் இலங்கையில் மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரும் நூதன மோசடி ஒன்றின் நாற்றம் நீதிமன்றப் படிகளிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ‘ஸ்போர்ட்ஸ் செய்ன்’ எனப்படும் போலியான கிரிப்டோ கரன்ஸி முதலீட்டுத் திட்டத்தில் தோரயாமாக அறுபது மில்லியன்...

Read More
உலகம்

புதிய உலக ஒழுங்கு (அல்லது) பணக்கார விளையாட்டு

இருபது வருடங்களுக்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் எழுபது சதவீதத்திற்கு மேலாக பளபளப்பு மிகு எஜமானனாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாலரின் வகிபாகம், சைனா- சவூதி- ரஷ்யா கூட்டால் ஐம்பத்தொன்பது சதவீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலக சந்தையிலிருந்து டாலரைக் காலியாக்கும் திட்டத்துடன் இக்கூட்டணி அமோக வீச்சில்...

Read More
உலகம்

கடைசிவரை புரியாத கணக்குகள்

எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று...

Read More
இலங்கை நிலவரம்

மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்

கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன்...

Read More
உலகம்

இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்

கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஹைபா, மேற்கு ஜெரூசலம் எங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி நெத்தன்யாகு அரசு முன்மொழிந்திருக்கும் புதிய நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேலிய வான்படை வீரர்களில் பெரும்பாலானோர் அரசு...

Read More
உலகம்

அங்கே வாழ்க்கை போனது; இங்கே உரிமை போனது!

பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை  ஒப்புவித்துக் கொண்டிருந்த போது...

Read More
இலங்கை நிலவரம் உலகம்

பிரபாகரனை உயிர்ப்பிக்கும் கலை

கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர்  பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப்...

Read More
உலகம்

அடுத்த திவால் தேசம்?

‘பாகிஸ்தான் பிரதமரே! உமக்கு வெட்கமாய் இல்லை.? ஏன் நீர் சர்வதேசமெங்கும் திருவோடு ஏந்தித் திரிகிறீர்.? ஒரு கையில் குர் ஆனையும், மறு கையில் அணு ஆயுதச் சூட்கேஸையும் எடுத்துக் கொள். உன் கெபினட்டிற்கும் இதையே செய்யச் சொல். பிளைட் பிடித்து அப்படியே ஸ்வீடனுக்குப் போ. ‘காசு மட்டும் தராவிட்டால் கதை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!