48. ஒற்றர் கண்காணிப்பு ஏற்கனவே மோதிலால் நேரு நிதி நெருக்கடியின் தாக்கத்தில் இருந்த சூழ்நிலையில், காந்திஜியிடமிருந்து நெசவாளர்கள் சங்கத்துக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் வந்தபோது, அவர் திகைத்துப் போனார். தன்னுடைய உண்மையான நிதிநிலைமையை காந்திஜியிடம் வெளிப்படையாக சொல்லி விடலாமா? வேண்டாமா? என்று அவருக்கு...
இதழ் தொகுப்பு April 2023
அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் என்னும் விமான நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. பணக்கார தேசத்தின் பெரும் பணக்காரர்களுக்கான விமான சேவையைத் தரும் நிறுவனமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது பணக்கார தேசத்தின் ஏழைகளுக்கான விமானம். யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். குறைந்த கட்டணம். டிக்கெட்...
பல வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவில் பெண்கள் தங்கள் கரு முட்டைகளை விற்றனர். குறிப்பாக, மாணவிகள். இதனால் மிகப்பெரிய தொகை பெற்றுக்கொண்டு கடன் இல்லாமல் படிக்க முடிந்தது. ஆனால், அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் மரபணுக்கள் பல இடங்களில் பரவியிருந்தன. பெற்றோரும், நன்கு படிக்கிற, எந்தப் பரம்பரை நோயும் வர...
‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.’ வானொலி விளம்பரங்களில் இவ்வகை வாக்கியங்கள் மிகவும் பிரபலம். இவற்றின் சோசியல் மீடியா அவதாரம்தான் ‘ப்ளூ டிக்’குகள் (Blue Tick). பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனாளர்களுக்கு வழங்கும் அங்கீகாரம் இந்த...
முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன...
ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா...
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு...
சீதையை இராவணன் கடத்தி கொண்டுவந்து விட்டான். அவள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பதைக் கண்டறியவே பல மாதங்கள் எடுக்கிறது. கிட்டத்தட்ட சீதை கடத்தப்பட்டு பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஒருவாறாக அனுமன் இலங்கைத் தீவு முழுவதும் அலைந்து சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இராமனுக்குச் சொல்லியாயிற்று. இனி...
ஆழி செந்தில்நாதன். பதிப்பாளர், எழுத்தாளர். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் ஆலோசகர். இவருடைய ஐலேசா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பன்மொழிப் பணித்தளத்தின் மேம்பட்ட பதிப்பு அறிமுகம் மற்றும் விளக்கக்காட்சி நிகழ்வு சமீபத்தில் நடந்தது. கண்ணதாசன் பதிப்பகம் காந்தி கண்ணதாசன், சிக்ஸ்த்சென்ஸ்...
மனிதனின் குணங்களைக் கற்பனையாக ஜடப்பொருள், விலங்கு அல்லது கடவுளின் மீது ஏற்றப்படுவது உலக வழக்கம்தான். இலக்கியங்களில், திரைப்படங்களில் இதனைக் காணலாம். தமிழில் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ போன்ற அறிவியல் புனைகதைகளில் சிந்திக்கும் இயந்திரத்தை அறிந்திருப்போம். இக்கற்பனையின் விளைவாக...