Home » சீதையின் அக்கினிப் பிரவேசமும் பவுத்த விகாரமும்
சுற்றுலா

சீதையின் அக்கினிப் பிரவேசமும் பவுத்த விகாரமும்

சீதையை இராவணன் கடத்தி கொண்டுவந்து விட்டான். அவள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பதைக் கண்டறியவே பல மாதங்கள் எடுக்கிறது. கிட்டத்தட்ட சீதை கடத்தப்பட்டு பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஒருவாறாக அனுமன் இலங்கைத் தீவு முழுவதும் அலைந்து சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இராமனுக்குச் சொல்லியாயிற்று. இனி பலரின் உதவியோடு, பல ஆயிரக்கணக்கான வானரங்களின் உதவியோடு, பல்லாயிரம் மைல்கள் கடந்து போரிட்டு இராவணனைக் கொன்று சீதையை மீட்கிறார்கள். இராவணனது படைகள், விபீஷணன் உட்பட பலர் இராமரின் பக்கம் வந்து சீதையை மீட்கப் போராடுகிறார்கள். போர் முடிந்த பிறகு சீதை முத்துபல்லக்கில் வைத்து அழைத்து வரப்படுகிறாள். அப்போது ராமன் அவள் கற்பைச் சந்தேகித்ததாகவும், அதனால் சீதை அக்கினி பிரவேசம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. மறுபுறம் சீதைக்கு இருந்த களங்கத்தைத் துடைக்க இராமன் அப்படி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு சொல்லப்படுகிற இந்த சம்பவங்கள் நிகழ்ந்த இடம்தான் திவுரும்பொல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!