Home »  உயிருக்கு நேர் – 50
உயிருக்கு நேர் தொடரும்

 உயிருக்கு நேர் – 50

க.வெள்ளைவாரணனார் (14.01.1917 – 13.06.1988)

துலங்குகின்ற தமிழ்ப்பெயர்  இவரது பெயர். அப்பெயர் இவருக்கு வருவதற்கு காரணம் அவரது பெரியப்பா. அவரது பெரிய தந்தையார் பிறந்த அன்றே இவரும் பிறந்ததால் அவரது பெயரையே இவருக்கும் சூட்டி விட்டார்கள். தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவ சித்தாந்தம், இசைத்தமிழ் என்று நான்கு புலங்களில் அருந்தொண்டாற்றி நூல்கள் வெளியிட்ட தமிழறிஞர் இவர். தமிழகத்தில் இந்திமொழி எதிர்ப்பு அலை எழுந்த போது, அந்த எதிர்ப்பில் வலுவாகக் கலந்து கொண்ட தமிழறிஞர்களில் ஒருவர். அந்தச் சமயத்தில் வலிந்த இந்திப் பரவலை எதிர்த்து இவர் எழுதிய ‘காக்கை விடு தூது’ என்ற நூலை அரசுக்கே அனுப்பி வைத்தார். அந்த நூலைப் பாந்தளூர் வெண்கோழியார் என்ற புனைபெயரில் எழுதியிருந்தார். வெளியிட்ட சமயத்தில் அந்த நூல் பரபரப்பு ஏற்படுத்திய ஒன்று.

தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ்த் திருமுறை ஓதப்பட வேண்டும் என்று 1930, 40களில் போராடிய தமிழறிஞர் வ.சு.ப மாணிக்கனாரோடு இணைந்து நின்று வெற்றி பெற்று, சிதம்பரம் ஆலயத்தில் திருமுறை ஓதவைத்த பெருமையைக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலை, கரந்தைத் தமிழ்ச்சங்கம், மதுரைப் பல்கலை, தஞ்சை தமிழ்ப்பல்கலை என்று அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணிசெய்த பெருமைக்கு உரியவர். விபுலானந்தர் எழுதிய யாழ்நூலின் ஆக்கத்துக்குப் பாயிரம் எழுதியதோடு, அந்த நூலாக்கத்தில் விபுலானந்தருக்குத் துணை நின்று பணிபுரிந்தவர். தில்லைப் பெருங்கோயில் வரலாற்றைத் தில்லைத் தமிழ்மன்றத்தில் வெளியிட்ட சிறப்பும் இவருக்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலை வெளியிட்ட கம்ப இராமாயணச் செம்பதிப்பு வெளியீட்டில் பங்கு பெற்ற தமிழறிஞர்களில் ஒருவர். சிறிதே குள்ளமான தோற்றத்துடன், நீறணிந்த நெற்றியும் துலங்கும் பார்வையும் புலப்படுத்தும் சமய ஈடுபாடும் அறிவும் விளங்கிவருமாறு, தூய வெண்ணிற ஆடையில் காட்சியளித்தவர். சித்தாந்தச் செம்மல் என்ற புகழ்ப்பெயர் பெற்றவர். சங்கப்புலவர் பெயரைக் கொண்ட வெள்ளைவாரணனார் அவர்களே இந்த வார உயிருக்கு நேர் பகுதி 50-ன் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!