Home » ப்ரோ – 4
தொடரும் ப்ரோ

ப்ரோ – 4

உலகத்தின் முதலாவது பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்த தேர்தல் இலங்கையில் 1960ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. சிலோன் ரேடியோவில் அரசியல் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். தனிச் சிங்களச் சட்டத்தை அமல்படுத்தப் போய் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் அமளிதுமளிகளையும், நாடெங்கும் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரங்களையும் கண்டு பெரும் நெருக்கடிக்குள்ளான எஸ்.டப்ளிவ் ஆர்.டீ.பண்டாரநாயக்க தமிழரசுக் கட்சியுடன் சமரசம் செய்யப் போக, சிங்களப் பேரினவாதம் அவர் உயிரைக் குடித்த கதையப் பார்த்தோம் அல்லவா..? தனிக்கட்சி தொடங்கி சிங்களத் தேசியவாதத்தின் அடையாளமாய், பவுத்தத்தின் மீட்பராய்ப் பரிணமித்த எஸ்.டப்ளிவ். ஆர்.டீ.பண்டாரநாயக்க சறுக்கிய இடத்தைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்ட ஸ்ரீமாவோ, தம் அரும்பெரும் பிராணநாதனின் ஆரம்பகாலக் கொள்கையில் துளிகூட மாற்றமில்லை என்றும் அவர் சிந்தனையில் இருந்த தர்மராஜ்யப்படியே ஆட்சி நிகழும் என்றும் அறிவித்தார்.

பிரிட்டிஷ் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த ஏராளமான தனியார்ப் பாடசாலைகள் அரசமயமாக்கப்பட்டன. லாபம் கொழித்துக் கொண்டிருந்த எரிபொருள் நிறுவனங்கள், பெரும் தொழிற்சாலைகள் கூடத் தப்பவில்லை. எல்லாமே தேசியவாதம் என்ற பெயரில் ஒரே நாளில் அரச உடமையாக்கப்பட்டன. இடைநிறுத்தப்பட்டிருந்த தனிச் சிங்களச் சட்டம், மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!