Home » ஒரு  குடும்பக்  கதை – 74
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 74

ஃபெரோஸ் காந்தி-இந்திரா காந்தி

74 ஏழே நாட்களில் சுதந்திரம்

கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு செய்தார்கள்.

நேரு அலகாபாத் திரும்பியதும் 1934 பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கல்கத்தாவில்  ஆல்பர்ட் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்ச்சிகளில்  ஆங்கிலேய அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவர் பேசியதுதான் இந்த முறை கைதுக்கு வழி வகுத்தது.  கைதன  நேரு கல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார்.

நேருவின் கைது பற்றி தெரிந்ததும், “நீ விடுதலையாகி ஐந்து மாதம்தானே ஆகிறது? அதற்குள் மறுபடியும் ஜெயிலுக்கா?” என்று ஸ்வரூப ராணி உடைந்துபோனார். கமலா நேருவுக்கும் அதே மனநிலைதான்.

கணவர் சிறையில், மகள் பூனாவில். மனத்தளவில் மிகவும் பலவீனமாகிப் போன கமலா நேருவுக்கு நோயின் தாக்கம் அதிகமானது.

“மீண்டும் பழைய வீட்டுக்குப் போகிறேன்” என்று தனது கைது பற்றி பூனாவில் இருந்த  இந்திராவுக்கு தந்தி கொடுத்தார் நேரு.

இரண்டாண்டு காலம் சிறை தண்டனை தரப்பட்ட நேருவை மே மாதம் கல்கத்தாவின் அலிப்பூர் ஜெயிலில் இருந்து டேராடூனுக்கு மாற்றினார்கள்.

மோதிலால் நேருவின் மரணத்துக்குப் பின் குடும்பத்தின் வருவாய் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. சிறை தண்டனையோடு கூட விதிக்கப்பட்ட அபராதங்களைக் கட்ட மறுத்ததன் காரணமாக, ஆனந்த பவனில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன.

சிறையில் இருந்த நேருவின் மன வேதனையும், வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகமானது. நிதி நெருக்கடி உள்ளிட்ட குடும்பப் பிரச்னைகள், கமலா நேருவின் உடல்நிலை, ஸ்வரூப ராணியின் உடல்நிலை, பூனாவில் உள்ள இந்திராவுடனான இடைவெளி இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால், சிறையில் இவரது கொட்டடியை ஒட்டிய பகுதியின் காம்பவுண்டு சுவரை இன்னும் நாலு அடி உயரமாக்கி, பசுமையே இவரது கண்களில் படாதபடி செய்த சிறை நிர்வாகத்தின் நடவடிக்கை இன்னொரு பக்கம்.

வீட்டில் பண நேருக்கடி ஏற்பட்ட சமயங்களில் கமலா நேரு தனது நகைகளில் சிலவற்றை விற்று சமாளித்தார். குடும்பத்தின் நிதி நெருக்கடி  பதினாறு வயது இந்திராவுக்கும் புரிந்தது.  தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு, சிக்கனத்தைக் கடைபிடித்தார். பரிட்சை எழுதி முடித்தவுடன், இந்திரா அலகாபாத் வந்து சேர்ந்தார்.

கமலா நேருவும், இந்திராவும் சிறைக்குச் சென்று நேருவை சந்தித்தபோது, மூவருக்குமே மனதுக்குள் புதைதந்து கிடந்த மன எரிச்சல் காரணமாக அது ஓர் பரஸ்பரம் மகிழ்ச்சியான சந்திப்பாக அமையவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!