Home » உயிருக்கு நேர்- 48
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 48

48  நெ.து.சுந்தரவடிவேலு  (12.10.1912 – 12.04.1993)

தமிழ்நாடு இந்திய அளவில் கல்வியில் முன்னிலையில் வகிக்கிறது என்பது ஒரு புள்ளிவிவரம். தேசியச் சராசரியைவிட மிக அதிகமாக 80 சதவிகிதத்தைத் தொட்டுக் கல்விபெற்ற மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்திய அளவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சதவிகிதத்தில் தமிழகம் இந்திய மாநிலங்களில் சிறந்தவற்றில் ஒன்று. இதற்கான சிந்தனையும் விதையும் உதித்தது தமிழக முதலமைச்சர்களில் சிறந்தவர்களில் ஒருவராக விளங்கிய காமராசரின் மூலம் என்றாலும், அதனைச் செயல்படுத்திய சாதனைக்குச் சொந்தக்காரர் ஒரு அதிகாரி. அவரைவிடப் பணியில் மூத்தவர்களும், ஆட்சிப்பணி அதிகாரிகளும் இருந்தபோதும், அவரது நிர்வாகத் திறனைக் கருத்தில் கொண்டு, இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, தனது மாநிலக் கல்விக் குறிக்கோளைச் செயல்படுத்த இவரைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார் தமிழக முதலமைச்சராக இருந்த காமராசர்.

தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்கள் எல்லோரும் கல்வி பெற்ற நிலையை அடைய, ஐந்து கல் தொலைவிற்கு ஒரு பள்ளி என்ற இலக்கு வகுக்கப்பட்டது; அதனைச் செயல்படுத்திய சாதனைக் கல்வியாளர் அவர். தமிழ்நாட்டின் இலவசக் கல்வித் திட்டம், இலவசச் சீருடைத் திட்டம், மதிய உணவுத் திட்டம், முதியோர் கல்வித்திட்டம், பொது நூலகத் திட்டம் என அத்தனை திட்டங்களையும் தீட்டியதிலும், திட்ட அளவில் மாபெரும் கனவுகள் போலிருந்த அவற்றை நிறைவேற்றிக் காட்டியதிலும் அவரது பங்களிப்பு அளப்பரியது. பொதுக்கல்வி இயக்குநராக அவரது பணிமேன்மை கண்டு, பொதுநூலக இயக்குநர் பொறுப்பையும் அவருக்குக் கூடுதலாக அளித்தார் காமராசர்; அதனை ஏற்றுத் தமிழ்நாடு முழுவதும் 400 கிளை நூலகங்களை அவரது பணிக்காலத்தில் நெ.து.சு ஏற்படுத்தினார் என்பது அவரது பணிச்சீர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டு அரசின் கல்வி ஆலோசகராவும் அவர் பணியாற்றினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!