Home » உயிருக்கு நேர் – 49
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 49

அ.ச.ஞானசம்பந்தன்

49 அ.ச.ஞானசம்பந்தன் (10.11.1916 – 27.08.2002)

பெருஞ்சொல் விளக்கனார் என்று புகழ்பெற்றிருந்தவர் அவரது தந்தை சரவண முதலியார்; தொடக்கத்தில் துணிக்கடை நடத்தி வந்திருந்தாலும் தமிழின் மீது ஏற்பட்ட தீராக்காதல் சரவண முதலியாரைத் தமிழ் கற்க வைத்து நல்ல தமிழறிஞர்களில் ஒருவராக மாற்றியிருந்தது. அவரது மகனாகத் தோன்றியவர் நமது நாயகர். கல்லூரியில் அவர் படிக்கத் தேர்ந்தது இயல்பியல். ஆனால் தமிழ்ப்புலம் அவரது பங்களிப்பைப் பெறாமல் போய்விடக்கூடாது என்றெண்ணிய நல்லூழ், அவரது ஆசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் மூலம் வந்தது. அவர்தான் நமது நாயகரை இயல்பியல் பாடத்திலிருந்து தமிழ்ப் பாடப் பிரிவுக்கு மாற்றினார். அந்த மாற்றம் தமிழிலக்கிய உலகுக்குப் புரிந்த அற்புதங்கள் பல. பெரியபுராண ஆய்வு என்ற காலத்தை விஞ்சி நிற்கும் ஒரு ஆய்வு நூலை அது தந்தது. நாற்பதுக்கும் அதிகமான தமிழிலக்கியத்தின் அற்புதமான விளக்க, ஆய்வு நூல்களை அந்த நல்லூழ் தந்தது. கம்ப இராமாயணத்தின் ஆழ அகலங்களைத் தமிழ் வாசகர்களுக்குப் புரியவைத்து விருந்தளித்து மகிழவைத்தது.

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் கம்பகாதையைப் பேச்சிலேயே அளிக்கவல்லவர் என்றால், நுணுகி நுணுகி விளக்கும் அருமைச்சுவை ததும்பும் விளக்க நூல்களைத் தந்தவர் அ.ச.ஞா. கம்பகாதையின் ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பாத்திர நோக்கில் கதைப்போக்கையும், காவியப் போக்கையும், அப்பாத்திரத்தின் அதுவரை காணக்கிடைத்திராத அற்புத வடிவமைப்பழகையும் விளக்கிய நூல்களை வரைந்தவர். ‘திருவாசகம் சில சிந்தனைகள்’ என்ற அவரது நூல் திருவாசகத்தின் மேன்மையை ஆய்வுப் போக்கில் எடுத்து வைப்பது. அறிவுப் புதையல் என்று போற்றப்பட்ட அவர் சாகித்திய அகாதமியின் விருதைத் தமிழுக்காக வென்றவர்; மேலைநாட்டுத் தரத்தில் திறனாய்வு நூல்கள் அமைய வேண்டும் என்றால் தமிழில் அது எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை விளக்கவே, இலக்கியக் கலை என்ற ஒரு நூலை எழுதினார் அவர். ஞானத்தமிழ் என்று போற்றுப்பெயர் கொண்ட, இருபத்தோராம் நூற்றாண்டு கண்ட உச்சமான தமிழறிஞர்களின் ஒருவரான அ.ச.ஞானசம்பந்தன் அவர்களே இந்தவார உயிருக்குநேர் பகுதி 49’ன் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!