Home » ஆபீஸ் – 93
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 93

93. வேட்கை

அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான்.

பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம். அவரை அடிக்கடிப் பார்ப்பது, சுந்தர ராமசாமியைப் பார்த்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றிற்று.

அசோகமித்திரன், சுந்தர ராமசாமியைப் போல இலக்கியம் பேசுவதில்லை என்பதுதான் அதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கவேண்டும். அவரிடம் உட்கார்ந்து அவர் கதைகளைப் பற்றிக்கூடப் பெரிதாகப் பேசமுடியாது. அந்த இடம் இப்படி இந்த இடம் அப்படி என்றெல்லாம் சொல்லி ரசித்துப் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்துப் பேச்சை மற்றிவிடுவார் அசோகமித்திரன்.

கதைகளைப் பற்றி என்றில்லாமல் எதைப் பற்றி இருந்தாலும் ஈடுபாட்டுடன் பேசினால் சுந்தர ராமசாமி காது கொடுத்துக் கேட்பார். பேசுவதை ஆத்மார்த்தமாக நம்பி பேசுகிறானா என்று பார்ப்பார். எதிரிலிருப்பவர் சொல்வது ரசிக்கத்தக்கதாக இருந்தால் அதை வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் முறுவலாகவேனும் வெளிப்படுத்துவார். ராமசாமியுடன் கழித்தவை மூன்றே நாட்கள்தான் என்றாலும் முழு வாழ்நாளுக்கும் போதும் என்பதைப்போல நினைக்க நினைக்க மனம் விம்மியது. சுந்தர ராமசாமியின் ஆஜானுபாகுவான உருவம் மட்டுமின்றி, வசதி காரணமாக யாரையும் அனுசரித்துப் போகவேண்டிய அவசியமின்மை காரணமாகவும் கறாரான அபிப்ராயங்களைக் கொண்டிருக்கவும் அவற்றை அதே கூர்மையுடன் வெளிப்படுத்தவும் அவரால் முடிகிறது எனத் தோன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!