Home » டெய்லர் ஸ்விப்ட்: தொட்டதெல்லாம் பொன்
ஆளுமை

டெய்லர் ஸ்விப்ட்: தொட்டதெல்லாம் பொன்

இந்தத் தலைமுறை அமெரிக்க இளசுகளில் 53 சதவிகிதம் பேர் தங்களை டெய்லர் ஸ்விப்ட் ரசிகர்கள் என்கிறார்கள். சுமார் இருபது வருடங்களாக பாப் இசை உலகில் டாப் இடத்தில் இருப்பதே பெரிய விஷயம். அதோடு, அவருடைய பொருளாதார வெற்றி ஒப்புவமை இல்லாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. டெய்லர் ஸ்விப்ட். ஈராஸ் டூர் கிளம்பிய வருடத்தில் அமெரிக்க வருமானத்தில் அவர் பங்கு மட்டும் 5.7 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய். இந்தப் பெண் தொட்டதெல்லாம் பொன். பாகுபலி மாதிரி ஒற்றை ஆளாகப் பல இடங்களில் கோவிட்டுக்குப் பிறகான பொருளாதாரச் சூழலைத் தூக்கி நிறுத்தியவர். பாப் ஸ்டாராக மட்டுமின்றி ஒரு ஐகானாக இருக்கும் டெய்லரின் வெற்றி ரகசியம் என்ன?

பல மணி நேரம் கான்சர்ட்களில் பாடி, ஓடி, ஆடி ரசிகர்களை மகிழ்விக்க உடல் நல்ல நிலையில் இருப்பது அவசியம். காலைப் பொழுது அதற்கே. மேடை நிகழ்ச்சியோ கம்போசிங்கோ இருந்தால் படுக்கைக்குச் செல்லும் நேரமே அதிகாலை ஆகிவிடும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. எழுந்த உடனே ட்ரெட் மில்லில் தாவி ஏறும் பழக்கமும் இல்லை.

சுமார் ஏழு மணி வாக்கில் எழுந்து எட்டு மணி போலத்தான் நாளை ஆரம்பிக்கிறார். தன்னுடைய பூனைக் குட்டிகளுடன் கொஞ்சம் விளையாட்டு. டீ, டோஸ்ட் மாதிரி கொஞ்சம் தீனி. கொஞ்சம் திறன்பேசிப் பயன்பாடு. பேச்சு, டெக்ஸ்ட். அப்புறம்தான் உடற்பயிற்சி. கால்களையும் இதயத்தையும் வலுவாக்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ட்ரெட்மில்லில் நடக்கும் போது தன்னுடைய பாடல்களை வாய்விட்டுப் பாடினால் கார்டியோ பயிற்சியும் ஆயிற்று. லிரிக்ஸ் பிராக்டீஸும் முடிந்துவிடும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!