Home » நடந்துவிட்டுப் படி. படித்துவிட்டுப் பற!
புத்தகம்

நடந்துவிட்டுப் படி. படித்துவிட்டுப் பற!

நடைப்பயிற்சி மனிதகுலத்துக்கு எத்தனை அத்தியாவசியமானது என்பதைச் சொல்ல வேண்டாம்.  நடைப்பயிற்சியுடன் வாசிப்புப் பயிற்சியும் சேர்ந்தால் அது எத்தனை அழகானதாக இருக்கும்! அப்படியொரு அற்புதம்தான் சென்னையின் புறநகர்ப் பகுதியான சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குப்பைமேடாக பாழ்பட்டுக் கிடந்த அந்த ஏரியை அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், அற்புதமான இயற்கை கொஞ்சும் இடமாக மாற்றிய பெருமை அப்பகுதி மக்களுக்கே உரித்தானது. சற்றேறக்குறைய வட்ட வடிவமான நீர்நிலையை சுற்றி மேட்டினை உருவாக்கி, ஓடுகள் பதித்து, அற்புதமான நடைப் பயிற்சிப் பாதையாக உருவாக்கி விட்டார்கள். இப்போது காலையும், மாலையும் எங்கெங்கிருந்தோ மக்கள் நடைப் பயிற்சிக்கு வருகிறார்கள்.  சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் குடும்பம் குடும்பமாகவும் வருகிறார்கள். ஒரு மினி சுற்றுலாத் தலமாகிவிட்டது இந்த இடம்.

இந்த ஏரிக்கரையில், படியிறங்கிச் சென்றால் கீழே சிறிய அரங்கமும், அரைவட்டமாக மேல்ஏறும் படிக்கட்டுகளை கொண்ட காலரி அமைப்பு ஒன்று திறந்தவெளிப் பார்வையாளர் அரங்கமாக அமைந்துள்ளது. அழகிய இவ்விடத்தை ஓர் இலவச நூலகமாக, படிக்குமிடமாக மாற்றியுள்ளார் அரவிந்தன் என்றோர் இளைஞர். காலரியின் நடுவிலுள்ள மேடையில் புத்தகங்களைத் தரை விரிப்பில் பரப்பி வைத்திருக்கிறார். விரும்ப்வோர் எடுத்துப் படிக்கலாம்.  என்ன பெரிய ஆதரவு இருக்கப் போகிறது என்று பெரிய எதிர்பார்ப்பில்லாமல் ஆரம்பித்ததுதான். ஆனால் இன்று சிட்லப்பாக்கம் ஏரிக்கு நடைப்பயிற்சிக்கு வரும் ஏராளமானவர்கள் நடந்து முடித்ததும் உட்கார்ந்து சில பக்கங்களாவது படிக்காமல் போவதேயில்லை!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!