52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
Author - விமலாதித்த மாமல்லன்
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...
48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...
47 அலைகள் கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. என்ன சொல்கிறார் இவர். ஒரே கடல்தானே. அது எப்படி ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று அவன் உள்ளூர எண்ணியதைப்...
46 அலைதலின் ஆனந்தம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கறாராகத் திட்டமிட்டுச் செய்பவன் என்கிற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்கும் பழகியவர்களுக்கும் உண்டாக்கினாலும் உள்ளூர, எப்படி, எங்கிருந்து, யார் அனுப்பி எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்கிற கேள்விகள் சதாநேரமும் அவனைப்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...
42 உட்காருதல் காலையில் வந்து இறங்கி, அறைக்குப்போய் ஜோல்னா பையை வைக்கும்போதே, உள்ளே இருந்த காவியைப் பார்த்துவிட்டு, பல் விளக்கிக்கொண்டிருந்த பாலாஜி கேட்டான்: என்ன சார் மலைக்குப் போறீங்களா. பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பி வைத்தான். திங்கக்கெழமை வரச்சொன்னா இப்ப வந்திருக்கீங்க, என்று ஏறெடுத்துப்...
41. பராக்கு – 2 தமிழ் மாலும் ஹே? என்கிற குரல் இரண்டு, மூன்றாவது தடவையாக ஒலித்தபோதுதான், இந்தி பிரசார சபாவின் விஸ்தாரமான வகுப்பறையின் வாயிற்காலில் சாய்ந்து நின்றிருந்தவனுக்கு உறைத்தது. கரும்பலகைக்கு முன்னால் இருந்த மேடைமேல் போடப்பட்டிருந்த மேஜை மீது கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு கொஞ்சம்...
40 பராக்கு ‘போனமா வந்தமானு இல்லாம போன வெடத்துல எல்லாம் என்ன பராக்கு வேண்டியிருக்கு’ என்று தாமதாமக வருகிற எல்லோருமே சின்ன வயதில் எதோ ஒரு சமயத்தில் திட்டுவாங்கியிருப்போம் என்றால் இவன், எவ்வளவு அடி உதை பட்டாலும் பாராக்கு பார்ப்பதை வாழ்க்கையாகவே கொண்டிருந்தான். வளர்ந்து ஆளான பிறகும்கூட இது...