Home » G இன்றி அமையாது உலகு – 2
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 2

2. நாமகரணம்

பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின் முதல் விதையும், பெரிய ஆராய்ச்சி முடிவுகளுக்கான முதல் யோசனையும், காவியத்தின் முதல் சொல்லும் என எல்லாமே இப்படி அமைந்தவைதான்.

`கூகுள்` என்ற வார்த்தையும் அப்படித்தான். இன்று அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் விரிவாக்கமாக தோதான ஒவ்வொரு ஆங்கில வார்த்தையைப் போட்டு அதனை விரித்து எழுதும் கலாச்சாரம் விரவியிருக்கிறது. ஆனால் உண்மையில் அது பொருளேதுமற்ற ஒரு மழலையின் வாயில் தோன்றிய உதிரிச்சொல் என்றால் நம்பத்தான் வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • எளிமையின் மொழி குழந்தைகளிடம்தான் உள்ளது. சுவாரஸ்யமான தொடர். வாழ்த்துகள்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!