Home » ஆபீஸ் – 94
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 94

94 கேட்பாஸ்

ஈரோடிலிருந்து அந்த ஆபீஸுக்கு மாற்றலாகி வந்த அன்றே அவன் அப்பாவும் அதே ஆபீசில்தான் இருந்தவர் என்பதைச் சொன்னதும் யார் என்ன என்று கேட்க, இவன் சக்ரபாணி ராவ் என்று சொல்ல, நீங்க என்று பேசிக்கொண்டிருந்த மோகன், ‘ராவ்ஜி பையனா நீ. மோகன், நீங்க ட்ரிப்ளிகேன்தானே, எப்படியும் செகண்ட் சாட்டர்டே சண்டேக்கு வீட்டுக்குப் போவீங்கில்ல. பைக்ராப்ட்ஸ் ரோட்ல இருக்கற மோகன் புக்ஸ் ஸ்டோர்ல பையனுக்கு SSLC இங்கிலீஷ் பேப்பருக்கு மினர்வா கைடு வாங்கிக்கிட்டு வரமுடியுமானு கேட்டு, நான் வாங்கிக்கிட்டு வந்து குடுத்துருக்கேன். எல்லோரா லாட்ஜ்லதான் ஸ்டே பண்ணியிருந்தேன். கிட்ட வந்துட்டே’ என்று நெருங்கியவர், சில மாதங்கள் முன்னால் பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் ஜாலி டிரிப் போனபோது ‘நீயும் வா’ என்று அழைத்துக்கொண்டு போனார். புத்தகம் போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இது எதற்கு வெட்டிச் செலவு என இவன் தயங்க, ‘அட நான் பாத்துக்கறேன் நீ சும்மா வா’ என்றார்.

போய் இறங்கியது, இஸ்கூல் பையனாக டூப்ளே தெருவில் பார்த்து பிரமித்த அரிஸ்டோ ஓட்டலில். உள்ளே நுழைவதைப் பற்றிக் கனவில் கூட நினைத்திராதவனுக்கு, அறைக்கே சிக்கன் – அதுவும் முழு தந்தூரி சிக்கன் வந்ததும் அதை ஆளுக்கொருவராய் பிய்த்துக்கொள்ள காலியானதும் உடனே குஷாலப்பா இன்னொன்று ஆர்டர் பண்ண அதுவும் வந்ததும் அதில் பாதிக்குமேல் கேட்பாரற்றுக் கிடந்ததும் தண்ணி குடிப்பதைப்போல பீர் பாட்டில்கள் வந்துகொண்டே இருந்ததும் கனவு போல இருந்தன. மோகனையும் ஆல் இண்டியா ரேடியோவில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பரான சம்பத்தையும் தவிர வந்த அத்தனைப் பேரும் மாமிசம் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். அவனும் சாதாரணமாக சிக்கனும் மட்டனும் வெட்டுவதைப் பார்த்து, அட என்று உடனடியாக எல்லோரும் அவனைத் தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

அதற்கு ஓரிரு நாட்கள் முன்புதான் அமேரிக்காவிலிருந்து சியோலுக்குப் போன கொரியன் பயணிகள் விமானத்தை, வேவு பார்க்கத் தன் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சொல்லி ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருந்தது. சிக்கனும் மட்டனும் தண்ணியுமாக சுட்டது சரியா தப்பா  என விவாதம் மணிக்கணக்கில் போய்க்கொண்டு இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!