Home » கமலா ஹாரிஸ்: ஒரு கையில் கரண்டி, மறு கையில் அமெரிக்கா
ஆளுமை

கமலா ஹாரிஸ்: ஒரு கையில் கரண்டி, மறு கையில் அமெரிக்கா

“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை!

அரசியல் முதல், நிறுவனங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலகின் வல்லரசின் துணை அதிபர் என்பது சாதாரணப் பதவி இல்லை. ஹிலரி கிளிண்டன், காண்டலீசா ரைஸ் போன்றவர்கள் மூன்றாம் நிலையான வெளியுறவுத்துறை அமைச்சராகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்க அமெரிக்கரும் பாதித் தமிழ்ப் பெண்ணுமான கமலா, ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சான்ஃப்ரான்சிஸ்கோவின் அரசுத்தரப்பு  சட்டவல்லுநராகத்தான் பணி செய்ய ஆரம்பிக்கிறார். ஆனால் குறைந்த காலத்திலேயே தன் திறமையால், அட்டார்னி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு வருடங்களில் முதல் அமெரிக்க ஆசியப் பெண் செனெட்டராகக் களமிறங்கி வெற்றி காண்கிறார்.

குடியுரிமை பெற ஒரு பாதை வகுக்கும் திட்டம், உடல்நலச் சீரமைப்புத் திட்டம், சட்டவிரோதமாக வந்தவர்களுக்கான குடியுரிமைக்கான பாதை வடிவமைப்பு எனப் பல திட்டங்களில் செயல்பட்டுத் தன்னை இனம்காண வைக்கிறார்.

ஒரே நாளில் ஏணியின் உச்சிக்குப் போனவர் இல்லை.  படிப்படியாக ஏறிப் போனவர், நான்கு படிகள் ஏறி இரண்டு படிகள் சறுக்கி விழுந்த பரமபத அடிகளின் வலியும் வேதனையும் எல்லாப் பெண்களுக்கும் இருப்பதைப் போல இவருக்கும் உண்டு!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கமலா ஹாரிஸ் பற்றி ஒரு நேர்மறையான கட்டுரை! இவ்வகைக் கருத்துகளை கமலாவுக்கோ ஹில்லாரிக்கோ பார்ப்பது அரிதாகவே இருக்கிறது. நன்றி

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!