Home » ஆபீஸ் – 92
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 92

92 நிலைகளும் நிலைப்பாடுகளும்

கிட்டத்தட்ட க்ரியா மூடுகிற நேரம். மாடிப்படி ஏறியவுடன் நுழைவாயிலுக்கு எதிரே இருந்த இடத்தில் நீண்ட சோபா செட் போன்ற ஒயர் பின்னிய நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். சி மோகனும் அதில் வந்து அமர்ந்துவிட்டார். அவன் அவர் வைகை குமாரசாமி  வசந்தகுமார் என்று சும்மா பேசிக்கொண்டிருந்தார்கள்.

பேச்சுக்கிடையில் பெயர் குறிப்பிடாமல், பெண் குழந்தையோடு கணவனை விட்டு வெளியேறி வந்த பெண்ணுடன் சாரு சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருப்பதை, ‘என்ன… ஆளு, மாடுங் கன்னுமா பிடிச்சிட்டான் போல’ என்றார் குமாரசாமி.

‘ஏங்க, அவன் கெட்டவனாவே இருக்கட்டும். அவன் செஞ்சிருக்கிறதை, இங்க எத்தனைப்பேர் செய்யத் தயாரா இருக்கோம். அதைப் பாராட்டக்கூட வேண்டாம். அதை இப்படியா கேவலமா பேசறது’ என்று இவன் எகிறிவிட்டான்.

இதை எதிர்பார்க்காத குமாரசாமி, சமாளிப்பாகப் பதில் சொல்லப் பலகீனமாக முயன்றார். ‘என்ன சொன்னாலும்  நீங்க அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. அது தப்புதான்’ என்று இவன் ஒரேயடியாய் அடித்துவிடவே, நைஸாக நழுவி மூடப்பட்டுக்கொண்டிருந்த கடைக்குள் சென்றுவிட்டார்.

அச்சுக்கோர்ப்பை க்ரியாவே செய்துகொள்வதற்காக, கோபாலபுரத்தில் மோகன் குடியிருந்த கி.ஆ. சச்சிதானந்தம் வீட்டு மாடிக்கு மேலே கம்போஸிங் யூனிட்டைப் புதிதாகத் தொடங்கியிருந்தார்கள். அதைப் பார்த்துக்கொள்ளத்தான் வந்திருந்தார் வைகை குமாரசாமி.

‘என்ன மோகன்’ என்றான் இவன், தான் சொன்னது சரிதானே என்பதைப்போல.

‘கரெக்டுதான். சில சமயங்கள்ல நீங்க அப்படியே மின்றீங்க’ என்றார் பாராட்டாய் சிரித்தபடி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!