Home » Archives for மெட்ராஸ் பேப்பர் » Page 6

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

நம் குரல்

எருமைகளா நாம்?

வேங்கை வயல் விவகாரம் அளித்த அதிர்ச்சியே இன்னும் நினைவை விட்டு நகராத நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சிலர் சக (பட்டியலின) மாணவனையும் அவனது சகோதரியையும் அரிவாளால் வெட்டியிருக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 16-17 வயது இளைஞர்களின் மனத்தில் சாதிய வன்மம் அந்தளவுக்கு ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதை...

Read More
நம் குரல்

இனி நம்பிக்கை வைக்க ஏதுமில்லை

மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பிரதமரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் தொடங்கியிருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய பிரதமர் இதனைத் தவிர்த்திருக்கிறார். அமித்ஷா பதில் சொல்வார். வேறு பலர் சொல்வார்கள். யாரோ எதையோ...

Read More
நம் குரல்

கைது அரசியல்

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தை விமரிசனம் செய்த குற்றத்துக்காகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தமிழ்நாட்டுக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். பத்ரி சேஷாத்ரியின் மணிப்பூர் தொடர்பான கருத்துகள் ஏற்கத்தக்கவையல்ல. சிந்திக்கத் தெரிந்த எந்த...

Read More
நம் குரல்

ராணுவத்தை அனுப்புங்கள்!

மணிப்பூர் கலவரம் அதன் அடுத்தக் கட்டத்தைத் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக அது வேறு ஏதோ தேசத்தின் பிரச்னை என்பது போல அமைதி காத்து வந்த பிரதமர் இப்போது முதல் முறையாக மணிப்பூர் குறித்துப் பேசியிருப்பதிலிருந்து இதனை உணரலாம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்னையாக...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

சங்கேதங்களும் குறியீடுகளும்

விளாதிமீர் நபகோவ் தமிழில்: சி. மோகன் குணப்படுத்த முடியாத அளவுக்கு மனப்பிறழ்வு கொண்டிருந்த  இளைஞனுக்கு, பிறந்தநாள் பரிசாக என்ன கொண்டு செல்வதென்ற பிரச்சனையை, இவ்வளவு நாள் நடந்தது போலவே,   நான்காவது வருடமாக இம்முறையும் அவர்கள் எதிர்கொண்டார்கள். அவனுக்கென்று ஆசைகள் ஏதுமில்லை. மனித உற்பத்திப் பொருள்கள்...

Read More
நம் குரல்

தேவை, ஒரு முகம்

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. எதிர்க்கட்சிகள் தம்மை வலுப்படுத்திக்கொள்வதிலும், ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதிலும் மும்முரமாக இருப்பதை உணர முடிகிறது. அமலாக்கத்துறை ரெய்டு...

Read More
நம் குரல்

மன்னிக்கத் தக்கதல்ல!

நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. பெருந்தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் என்றால், அதனை முன்வைத்துச் சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வார்கள். கவனிக்க. நன்னடத்தை இருந்தால் மட்டும். மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதப்பட்டால்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மூன்று துறவிகள்

லியோ டால்ஸ்டாய் தமிழில்: ஆர். சிவகுமார் வோல்கா பிரதேசத்தில் வழக்கிலுள்ள ஒரு பழங்கதை நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வீண் சொற்களை அலப்பாதேயுங்கள்; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் தந்தையை நோக்கி நீங்கள்...

Read More
நம் குரல்

கணக்குப் போடும் கலை

ஒரு வைரஸ் காய்ச்சல் வரப் போகிறதென்றால் முதலில் லேசாகத் தொண்டை கரகரக்கும். பிறகு மூக்கொழுகும். தலை வலிக்கத் தொடங்கும். கடைசியில் காய்ச்சல் வந்ததும் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவோம். அல்லது மருந்துக் கடையில் பாராசிட்டமால் வாங்கிப் போட்டு சரி செய்ய நினைப்போம். ஒரு நாட்டின் சுகக் கேடு என்பது பொதுவாக...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

டாக்டர் பிராடியின் அறிக்கை

ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹெஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு: ஆசிரியருடன் இணைந்து நார்மன் தாமஸ் டி ஜியோவேனி தமிழில்: ஆர். சிவகுமார் என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப் பிடித்துத் தந்த லேன் என்பவருடைய “அரேபிய இரவுகளின் கேளிக்கைகள்’’ (லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!