முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர வலதுசாரி ஆட்சியாளர்தான் சரி என்று முடிவு செய்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் அமெரிக்கர்களும் சரி; கிட்டத்தட்ட அதே மனநிலையில் தமது தலைவர்களைத்...
Author - மெட்ராஸ் பேப்பர்
மத்திய அரசு தாக்கல் செய்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பன்னிரண்டு லட்சம் வரை ஈட்டும் வருமானத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர். பலன் பெற்ற ஒரு கோடி மக்கள் மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து, நிறைய பொருள்கள் வாங்கி சில்லறை விற்பனைச் சந்தையில் வியாபாரம் கூடி...
ஆயிரம் நாள்களை நோக்கிப் போகும் பரந்தூர் சுற்றுப்பகுதி மக்களின் போராட்டம் நடிகர் விஜய் தலையிட்டதால் சற்றே கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராடி வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்படச்...
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது எனப் பல நாட்டு மக்கள் நினைக்கின்றனர். பெரும்பான்மை இந்திய மக்களின் கருத்தும் அதுதான் என்கிறார்கள். சவுதி அரேபியர்களும் ரஷ்யர்களும்கூட இப்படியொரு...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம் நடந்திருப்பது அந்த அளவுக்குப் பிரபலமாகவில்லை என்றாலும் அவசியம் பொருட்படுத்தி கவனிக்க வேண்டியதே ஆகும். ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆமிர் கான்...
தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும் நிகழும் இந்த வெளிநடப்புக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரும் விதிவிலக்கல்ல. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும்...
பணத்தின் மதிப்பை அறிந்த ஒரே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். இந்தியாவின் பிரதமராக இருந்தோரைப் பட்டியலிட்டால் நேருவுக்குப் பிறகு, நாம் இந்தியராகப் பெருமை கொள்ளத் தக்க பிரதமரும் இவரே. மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் இராஜ்யசபா உறுப்பினராகப் பதவியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். தன்னுடைய பதிநான்கு வயதில் எழுத ஆரம்பித்தவர் கருணாநிதி. கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தவர். அவருடைய சட்டமன்ற உரைகள் மட்டுமே பன்னிரண்டு தொகுப்புகள். தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு...
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தியாவும் இலங்கையும் பேசினால் மீனவர்கள் விவகாரம் தவிர்க்க முடியாத பேசுபொருள். இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை அதிபரை வலியுறுத்தும்படி மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்...
72. மகாமுனி அதற்குமுன் அவன் அப்படி இருந்து நான் கண்டதில்லை. விண்ணை நோக்கிச் செலுத்தப்படவிருந்த அக்னி அஸ்திரம் போலத் தகித்து அமர்ந்திருந்தான். எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. விவரம் தெரியாமல் யாராவது அப்போது அவனை நெருங்கினால் பஸ்மமாவதைத் தவிர்க்கவே இயலாது போகும். அதனாலேயே அவசர அவசரமாகக் குடிலைவிட்டு...