Home » Archives for மெட்ராஸ் பேப்பர் » Page 4

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

நம் குரல்

வரலாறு கண்ட இடர்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்திருக்கும் மழையை வரலாறு காணாத மழை என்று சொல்கிறார்கள். வானிலை மைய இயக்குநர், இப்படியொரு மழையை என் பணிக்காலத்தில் கண்டதில்லை என்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளில் பதிவான மழையின் அளவு ஓராண்டு முழுவதும் பெய்திருந்தாலும் வந்திருக்க...

Read More
நம் குரல்

முந்நூற்று எழுபதுக்கு முற்றும்

மீண்டும் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு பேசுபொருளாகியிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியதை அடுத்துத் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அரசின் நடவடிக்கை சரியே என்பது...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

போர் – லூயிஜி  பிரந்தல்லோ  

இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ரோமிலிருந்து புறப்பட்ட பயணிகள், பிரதான மார்க்கத்தை சல்மோனாவுடன் இணைக்கும் பழங்கால உள்ளூர் வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடர ஃபேப்ரியனோ என்ற சிறிய நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. விடியற்காலையில், ஏற்கனவே இரவைக் கழித்திருந்த ஐந்து பேர், புழுக்கமும்...

Read More
நம் குரல்

மழை அரசியல்

சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை மழை என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் வேறு சிந்தனையே இல்லாமல் அதைக் குறித்து மட்டுமே பேசுவது சென்னை மக்களின் பழக்கம். அப்படி ஆண்டுக்கொரு முறை வருகிற மழையும்...

Read More
நம் குரல்

நீதிக்குத் தலை வணங்கு

மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சியாகிவிடுவதே காரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சட்ட மன்றத்தில் செயல்படும் எதிர்க்கட்சிகள்கூட அத்தியாவசிய...

Read More
நம் குரல்

ஆட்டம் மிக அதிகம்

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது. இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில்...

Read More
நம் குரல்

மன்னிக்க வாய்ப்பில்லை!

ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின் ஆயுதப்படைப் பிரிவுகளான மணிப்பூர் மக்கள் படை, காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலைப் படை ஆகியவற்றையும் மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட விரோத அமைப்புகளாக...

Read More
நம் குரல்

நிறுத்துங்கள்!

காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக இதனை மேலோட்டமாகக் கண்டித்துவிட்டு இஸ்ரேலியப் பிரதமர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். உண்மையில் காஸாவில் இன்று நடந்துகொண்டிருக்கும்...

Read More
நம் குரல்

இரண்டு சம்பவங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலையளிக்கிறது. சென்ற வாரம் சென்னையில் கவர்னர் மாளிகையின் வாசலில் ஒரு பெட்ரோல் குண்டுச் சம்பவம். பிறகு கேரளத்தில் ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவம். சென்னை சம்பவத்தில் பாதிப்பு...

Read More
நம் குரல்

ஒன்று மட்டும் இல்லை!

பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் போரைத் தொடங்கியது ஹமாஸ்தான். அதில் ஐயமில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் ஹமாஸை ஆரம்பிக்கவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. காஸா பிராந்தியமே கிட்டத்தட்ட துடைத்துவிடப்பட்டாற்போல ஆகிவிட்டது. மருத்துவமனைகள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!