Home » Archives for மெட்ராஸ் பேப்பர் » Page 8

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...

Read More
நம் குரல்

செங்கோல் அரசியல்

ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி வைத்துவிட்டு இந்த செங்கோல் அரசியலைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பது நல்லது. மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முகம் இருந்து வருகிறது...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மரம்

மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...

Read More
நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய...

Read More
நம் குரல்

சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

கறுப்பு ஆடு

இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் எல்லோருமே திருடர்களாக இருந்த நாடு ஒன்று இருந்தது. இரவில் ஒவ்வொருவரும் எல்லாப் பூட்டுகளுக்கும் பொருந்தும் சாவிகளோடும் ஒளி மட்டுப்படுத்தப்பட்ட லாந்தர்களோடும் வீட்டைவிட்டுக் கிளம்பிப்போய் அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் புகுந்து...

Read More
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மீளல்

சாதத் ஹசன் மண்டோ தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு மணி நேரத்திற்குப்பின் லாகூரிலுள்ள மொகல்புராவிற்கு வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் காயமுற்றிருந்தனர். காணாமல்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 49

49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான். லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம்...

Read More
நம் குரல்

கடலோரக் கவலைகள்

சில நாள்களுக்கு முன்னர் சென்னை கடற்கரையை ஒட்டிய நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த மீன் கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தினரால் அப்புறப்படுத்தப்பட்டன. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இதனை எதிர்த்தன. பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர். மேலோட்டமான பார்வையில் இது ஒரு சிறிய, எளிய சம்பவம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!