Home » இரண்டு சம்பவங்கள்
நம் குரல்

இரண்டு சம்பவங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுச் சம்பவங்கள் நிகழ்வது கவலையளிக்கிறது. சென்ற வாரம் சென்னையில் கவர்னர் மாளிகையின் வாசலில் ஒரு பெட்ரோல் குண்டுச் சம்பவம். பிறகு கேரளத்தில் ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவம். சென்னை சம்பவத்தில் பாதிப்பு இல்லை என்பது நிம்மதியளித்தாலும் கேரளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மூன்று பேர் (இதுவரை) பலியாகியிருக்கிறார்கள். பலர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக தீபாவளி நெருங்கும் சமயங்களில் பட்டாசுகளுக்கு எதிர்ப்பு வரும். அது சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுவது. கேரளத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பார்க்கும்போது பட்டாசுத் தடை வேறு பல காரணங்களுக்காகவும் அவசியமே என்று எண்ணத் தோன்றுகிறது.

கடைக்குச் சென்று கொஞ்சம் பட்டாசுகள் வாங்கிக்கொண்டு, யூட்யூபைப் பார்த்துப் பட்டாசு மருந்தை உருவிக் கொட்டி வெடிகுண்டாக்குவதெல்லாம் எண்ணிப் பார்க்கவே முடியாத பயங்கரம். குண்டு கலாசாரம் பெருகுவதும் பரவுவதும் நமது நாட்டுக்கு நல்லதல்ல.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!