Home » போர் – லூயிஜி  பிரந்தல்லோ  
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

போர் – லூயிஜி  பிரந்தல்லோ  

இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் ரோமிலிருந்து புறப்பட்ட பயணிகள், பிரதான மார்க்கத்தை சல்மோனாவுடன் இணைக்கும் பழங்கால உள்ளூர் வண்டியில் தங்கள் பயணத்தைத் தொடர ஃபேப்ரியனோ என்ற சிறிய நிலையத்தில் விடியும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

விடியற்காலையில், ஏற்கனவே இரவைக் கழித்திருந்த ஐந்து பேர், புழுக்கமும் புகையும் நிரம்பிய இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள், துக்கம் அனுஷ்டிக்கும் கறுப்பு உடையில் இருந்த ஒரு பருமனான பெண்மணிக்கு இடமளித்தார்கள். வடிவமற்ற மூட்டையைப்போல அவள் தோன்றினாள். அவளைப் பின்தொடர்ந்து மூச்சிறைப்பும் புலம்பலுமாக அவளுடைய கணவர் உள்ளே வந்தார்; குள்ளமான ஒடிசலான தேகவாகு; முகத்தில் மரண வெளுப்பு; சிறிய பிரகாசமான அவருடைய கண்கள் சங்கோஜமும் வெட்கமும் நிரம்பியவையாக இருந்தன.

உட்கார இடம் கிடைத்தபின், தம்முடைய மனைவிக்கு இடமளித்த பயணிகளுக்கு அவர் பண்புடன் நன்றி சொன்னார். பிறகு கோட்டின் காலரை கீழே இழுத்துவிட முயன்றுகொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து, “எப்படி இருக்கிறாய்?’’ என்று கேட்டார்.

கேள்விக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக அவருடைய மனைவி, முகத்தை மறைக்கும்விதமாக காலரை மீண்டும் மேலே இழுத்து விட்டுக்கொண்டாள்.

“கேடுகெட்ட உலகம்’’ என்று ஒரு சோகப் புன்னகையுடன் அவளுடைய கணவர் முணுமுணுத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!