Home » AI புகுந்த சினிமா
அறிவியல்-தொழில்நுட்பம்

AI புகுந்த சினிமா

தமிழ் சினிமாவில் படத்தின் வெற்றி தோல்விக் கணக்குகள் தாண்டி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற பிரத்யேகக் காட்சிகள் பல இருக்கின்றன, இல்லையா? பாட்ஷாவில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் மறுபக்கத்தைக்காட்டும் சண்டைக்காட்சியாகட்டும், விஸ்வரூபம் படத்தில் கமலின் முதல் சண்டைக்காட்சியாக இருக்கட்டும், சுப்ரமணியபுரத்தின் அதிர்வுக்குரிய அந்த இறுதிக் காட்சியாகட்டும்…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவையெல்லாம் ஏதோவொரு விதத்தில் கதாநாயக பிம்பத்தை, கதையின் அழுத்தத்தை உறுதி செய்வதாலேயே உச்சம் பெற்றன. ஆனால் இவையேதும் இல்லாமலேயே ஒரு காட்சி தமிழ்த் திரையுலகில் பெரும் பேசுபொருளாக ஆகியது. தமிழகத்தின் கனவுக்கன்னியாக இருந்து, ஒரு பெரிய திரைவலம் வந்து இறந்து போனவரை மீண்டும் திரையில் காட்சியாகப் பரிமளிக்க வைத்த அதிசயம்தான் அதற்குக் காரணம்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான `மார்க் ஆண்டனி` என்ற திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா வருவதாக காட்டப்பட்ட காட்சிகளைப் பற்றித்தான் சொல்கிறோம். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்ட ஒருவரைத் திரையில் மீண்டும் கொண்டு வர, அவரைப்போலவே முகச்சாயல் கொண்டவரைத்தான் முதலில் தயாரித்திருக்கிறது படக்குழு. இதற்கென விஷ்ணுப்ரியா என்ற இன்ஸ்ட்டாகிராம் பிரபலத்தைக் கூட்டிக்கொண்டு வந்து கெட்டப்பை மாற்றி, கோணத்தை மாற்றி, மேக்கப்பை மாற்றி ஏதேதோ செய்திருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் சில ஃப்ரேம்களுக்கு மட்டுமே சரியாக வந்திருக்கிறதே ஒழிய ஒட்டுமொத்தமாகப் பெரிய திரையில் சில்க் ஸ்மிதாவை கொண்டு வருவதில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்திருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!